அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,56,92,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 2,68,58,407 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10,45,826 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,78,8,418 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,306 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,75,484 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 71 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 9,917 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,548 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,75,212 பேர் குணமடைந்துள்ளனர்.
* அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.
கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
விரைவில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை தகவல்.
* பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்வது குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பாடத் திட்டத்தை குறைப்பது, பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது மற்றும் பொதுத்தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி, சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
காலை, 10:30 முதல், மாலை வரை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, நாகராஜ முருகன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன், உஷாராணி, குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.
* திருச்சி: முசிறி அருகே உமையாள்புரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
காரில் 7 பேர் பயணித்த நிலையில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை.
* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:
ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி.
மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு.
சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு.
* சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,903 கன அடியில் இருந்து 11,318 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.51 அடியாகவும், நீர் இருப்பு 62.92 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
* சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பலி:
தலைமை செயலக காவல் உதவி ஆய்வாளர் பாபு உயிரிழப்பு.
கடந்த 3ம் தேதி அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் பாபு.
* சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியிடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு:
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் முதல்வரை சந்தித்து பேசினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
* தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை:
முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ள அலுவல் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
* நாகை: வேதாரண்யம் அருகே வாய்மேட்டில் சம்பா பயிர்களை காப்பாற்றக் கோரி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்:
* சாகுபடி வயலுக்கு தண்ணீர் பயன்படுத்த முடியாமல் 700 ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதாக வேதனை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்:
வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்.
ஸ்டாலின் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரின் செயலாளரிடம் வழங்க உள்ளனர்.
* டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு.
* அக்டோபர் - 15 திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம். ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.
அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமண விவகாரம்: 19 வயது நிரம்பிய தனது மகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு கடத்திச் சென்றதாக தந்தை புகார்:
மகள் சவுந்தர்யாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல்.
நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்.
கல்லூரி மாணவி சவுந்தர்யாவை நேற்று அதிகாலை திடீரென திருமணம் செய்தார் பிரபு எம்.எல்.ஏ. மகளை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக தந்தை சுவாமிநாதன் புகார்.
சவுந்தர்யாவின் சம்மதத்துடன் திருமணம் செய்ததாக பிரபு எம்.எல்.ஏ விளக்கம்.
* சென்னையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு:
அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தி வருகிறார்.
* உத்திரப் பிரதேசம் - ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்.- உச்சநீதி மன்றத்தில் உத்திரப் பிரதேச அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.
வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது.
ஹாத்ரஸ் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.
* பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம். இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது - செங்கோட்டையன்.
* உத்திரப் பிரதேசம்: ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதால் அதிர்ச்சி:
உறவுக்கார சிறுவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
ஹத்ராஸை சேர்ந்த 6 வயது சிறுமி அலிகாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கொடூரம் நிக்ழ்ந்துள்ளது.
* மருத்துவ மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும்"
தமிழக அரசு மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
2 ஆண்டுகள் பணி முடித்த பிறகே, சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் - உயர்நீதிமன்றம்.
* கொரோனா தொற்று பாதித்தவர் வீடுகளை மறைத்து தகரம் அமைக்க என்ன காரணம்?
எந்த விதிகளில் தகரம் அமைக்கக் கூறப்பட்டுள்ளது?
சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி.
கொரோனா சிகிச்சை தொடர்பாக பிரியங்கா என்பவர் தொடர்ந்த வழக்கு.
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
* கிசான் திட்டத்தை அமல்படுத்தும் ஊழியர்கள் இடமாற்றத்துக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கிசான் திட்ட முறைகேட்டை தொடர்ந்து 1000 ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ததை எதிர்த்து வழக்கு.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அதிகாரிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவு.
* வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்.
*இயற்பியலுக்கான 2020- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக்குழு.
சிறிது நேர தாமதத்திற்கு பிறகு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 நபருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ரோஜர் பென்ரோஸ், ரீனீஹார்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிப்பு.
விண்மீனின் மையத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிப்பு.
* வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
விளக்கம்:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் துறை சம்பந்தப்பட்ட 3 சட்டங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்த முயற்சி:
ஏற்கனவே இருந்த சட்டத்தில் விவசாயிகள் பொருட்களை விற்க கட்டுப்பாடுகள் இருந்தன.
வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்
மத்திய அரசு பட்டியலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகத்தை மட்டுமே மாற்றியுள்ளோம்.
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 8 சதவீத வரி இனி கிடையாது.
மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு வெளியே மற்ற வரிகள் இருக்காது.
- நிர்மலா சீதாராமன்.
* தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் தொடங்க தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் தொடங்க தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கு:
விவசாயம் மாநில பட்டியலுக்கு உட்பட்டதென்பதால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் - தமிழக அரசு.
* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த வழக்கு:
ரவீந்திரநாத் மனு மீது அக்டோபர் 16-ல் தீர்ப்பு - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
தன் மீதான வழக்கை நிராகரிக்கக் கோரி, ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.
* இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
தமிழக மின்வாரியத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி.
* உள்ளூர் மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகள் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும்"
"மொழி விவகாரத்தில் தேவையற்ற அரசியல் நகர்வுகள் உள்ளன"
ஊட்டி ஆயுத தொழிற்சாலை பணியிடத்துக்கான தேர்வில் குளறுபடி என வழக்கு.
* அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? - நாளை அறிவிப்பு - முதல்வர் வீட்டில் 10 அமைச்சர்கள் தீவிர ஆலோசனை... துணை முதல்வர் வீட்டிலும் அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் சந்திப்பு. அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முதல்வருடன் பேச்சு.
முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் ஆலோசனை. நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தீவிரம்.
No comments:
Post a Comment