பள்ளிகளில் நீதிபோதனை (Moral Science) பாடம் கட்டாயமாக்க வேண்டும். இன்றைய மாணவ - மாணவிகள் வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய சொத்து. - பாமக தலைவர் ஜி. கே. மணி வலியுறுத்தல்.
மாணவ - மாணவிகள் ஆற்றல் மிக்கவர்களாக, நல்லவர்களாக, வல்லவர்களாக, சாதனையாளர்களாக வளர்த்தெடுக்க வேண்டியதும், அதே நேரத்தில் அவர்கள் வீணாகாமல் பாதுகாக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் கடமையும் அரசுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு.இதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தொடர்ந்து வாதாடினேன். எனது கோரிக்கை சட்டமன்றத்தில் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மீண்டும் கானல் நீராகிவிட்டது. அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாணவ - மாணவிகளின் பிஞ்சு மனதில் நஞ்சு விளையாமல் நெஞ்சம் வலிமை பெற - ஒவ்வொருவம் தன் கனவு வாழ்வின் முன்னேற்றமே என்ற இலட்சிய நெறியுடன் படிக்க வேண்டும். பெற்றோர் சொற்படி நடந்து நல்லொழுக்கம்,கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.- விரும்புகிற உயிர் கல்வி வரை படித்து தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தில் எதையும் சாதனை படைப்பேன் என்ற வேட்கை உணர்வை உண்டாக்க, ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்க பள்ளிகளில் நீதி போதனை பாடம் கட்டாயமாக்க வேண்டும்.
இன்றைய காலச் சூழலில், நவீன தகவல் தொலை தொடர்பு தெழில்நுட்பத்தில் மாணவச் செல்வங்கள் தன்னை அறியாமலே திசைமாறி போகவும், வீணாக்கிக் கொள்வதுமான ஏராளமான நிகழ்வுகள் பெற்றோர்களையும் பெரியோர்களையும் பதைபதைக்கச் செய்கின்றன. மாணவ - மாணவிகள் ஒவ்வொருவரும் உயர் கல்வி வரை நன்கு படித்து எதிர்காலத்தில் சாதனையாளர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு.
எனவே ஒவ்வொருவரிடமும் தன்னம்பிக்கை உருவாக்க, சாதனையாளர்களாகும் சிந்தனையை மேம்படுத்த, மனதை பண்படுத்த, இலட்சிய வாழ்வியல் நெறியை உணரச் செய்ய, பள்ளிகளில் நீதி போதனை (MORAL SCIENCE) பாடம் கட்டாயமாக்க வேண்டும். இதற்குமுன் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வாதாடினேன். சட்டமன்றத்தில் எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிபோதனை வகுப்பு நடைமுறைப்பட்டது. பின் அது கானல் நீராகி விட்டது. காலத்தின் தேவையை உணர்ந்து மாணவச் செல்வங்களை மேம்படுத்திட, பாதுகாத்திட கல்வி நிறுவங்களில் நீதி போதனை (MORAL SCIENCE) பாடத்தை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment