அக்னிப்புரட்சி இன்றைய (07.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3.60 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 2,71,43,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் 10,54,514 பேர் மரணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 78,39,615 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,369 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,76,779 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 67 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 9,984 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,524 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,80,736 பேர் குணமடைந்துள்ளனர்.
* கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நாம் இவ்வருட இறுதியில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது -உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்.
சுமார் 9 கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருகின்றது- டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்.
* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை ஈ.பி.எஸ் அறிவித்தார்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பிரபாகரன், மோகன், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், கீ.மாணிக்கம் ஆகிய 11 பேர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.
* அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி- அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர்கள் வாழ்த்து.
அதிமுகவில் 10 நாட்களாக நீடித்த உச்சகட்ட உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வந்தது.
* நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும்: வானிலை ஆய்வு மையம்.
அந்தமான் கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை -வானிலை ஆய்வு மையம்.
கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலவச மின்சாரம் பெற வெங்கடேசன் என்பவரிடம் லஞ்சம் பெற்ற தென்னரசி என்ற பொறியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* தங்கத்தின் விலை சவரன் ரூ. 440 குறைந்து ரூ. 38,440க்கு விற்பனை.
இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரன் ரூ. 440 குறைந்து ரூ. 38,440க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,805க்கு விற்பனை ஆகிவருகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.40குறைந்து ரூ.62.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான ரயில்வே மேம்பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
* தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
நவம்பர் 19 க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு. நீதிமன்ற உத்தரவுப்படி 15% தண்ணீரை
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காத
ஆலைகளை மூடலாம் - உயர்நீதிமன்றம்.
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்கு எதிரான வழக்கில்
நீதிமன்றம் உத்தரவு.
* 2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு:
எம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய இருவருக்கு கூட்டாக நோபல் பரிசு.
செல்களின் டிஎன்ஏக்களில் மாற்றம் செய்யும் மரபணு பொறியியல் தொடர்பான ஆய்வுக்கு நோபல் பரிசு.
* சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கம் - பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான
வரித்துறை அதிரடி நடவடிக்கை.
சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்
சொத்துக்களை முடக்கியது வருமானவரித்துறை.
முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு.
2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில்
சோதனை நடத்தினர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்கள்
அடிப்படையில் வருமான வரித்துறை அதிரடி.
* அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது"- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- நீதிபதிகள்.
தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் பதிலளிக்க நவம்பர் 20 வரை அவகாசம்.
அரசு உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் தாக்கல் செய்த வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைப்பு.
* முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது?-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி.
சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கான அபராத தொகையையும் 2 ஆயிரமாக உயர்த்தலாம் - நீதிபதிகள்.
தொற்று ஏற்பட்டால் தன் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் - நீதிபதிகள்.
* பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வுக்கு, 4 சுற்றுகள் கொண்ட அட்டவணையை வெளியிட்டது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்.
தொழில் பிரிவு மாணவர்களின் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஒரே சுற்றாக நடைபெறுகிறது.
* ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 168 ரன்கள் இலக்கு:
முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - ரூ.300 க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு- tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
* முன்னாள் சிபிஐ இயக்குநரும், மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமார் மரணம்.
நாகாலாந்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் சிபிஐ இயக்குனருமான அஸ்வானி குமார் வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
* கெவின்-கேர் குழுமம் டாக்டர். சி.கே. ராஜ்குமார் உயிரிழந்தார்.
ஷாம்பு வர்த்தகத்தில் சாஷே பாக்கெட்டின் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ராஜ்குமார்.
சென்னையில் உயிரிழந்த இவரது இழப்பு வர்த்தக உலகில் ஈடு செய்ய முடியாதது என்பது நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment