சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம்  அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா

34. அரசன் முரசு அறைவித்து வடபுலமன்னர்கள்
முதலான அனைவரும் அறியச் செய்தல்

பல்லாண்டு வாழ்க நின் கொற்றம் ஈண்டு என
வில்லவன் கோதை வேந்தர்க்கு உரைக்கும்
நும் போல் வேந்தர் நும்மொடு இகலிக்
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயல்கொடி
பகைப் புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை,
திகை முக வேழத்தின் செவியகம் புக்கான;

கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்,

வடஆ ரியரொடு வண்தமிழ் மயக்கத்‌துஉன்‌
கடமலை‌வேட்டம்‌என்‌கட்புலம்‌பிரியாது
கங்கைப்‌பேர்‌யாற்றுக்‌கடும்‌புனல்‌நீத்தம்‌

எம்கோ மகளை ஆட்டிய அந்‌நாள்‌,
ஆரிய மன்னர்‌ஈர்‌ஐந்‌நூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செருவெங்‌கோலம்‌
கண்விழித்துக்‌கண்டது கடுங்கண்‌கூற்றம்‌!
இமிழ்‌கடல்‌வேலியைத்‌தமிழ்நாடு ஆக்கிய

இது நீ கருதினை ஆயின்‌, ஏற்பவர்‌
முதுநீர்‌உலகில்‌முழுவதும்‌இல்லை!
இமயமால்‌வரைக்கும்‌எம்‌கோன்‌செல்வது
கடவுள்‌எழுத ஓர்‌கற்கே ஆதலின்‌,
வடதிசை மருங்கின்‌மன்னர்க்கு எல்லாம்‌

தென்தமிழ்‌நாட்டுச்‌செழுவில்‌கயல்புலி
மண்தலை ஏற்ற வரைக ஈங்கு என
நாவலம்‌தண்பொழில்‌நண்ணார்‌ஒற்று
நம்‌
காவல்‌வஞ்சிக்‌கடைமுகம்‌பிரியா
வம்பணி யானை வேந்தர்‌ஒற்றே

தம்செவிப்‌படுக்கும்‌தகைமைய அன்றோ!
அறை பறை” என்றே அழும்பில்‌வேள்‌உரைப்ப
நிறை அரும்‌தானை வேந்தனும்‌நேர்ந்து
கூடார்‌வஞ்சிக்‌கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மாநகர்‌புக்கபின்‌

“வாழ்க எம்கோ மன்னவர்‌பெருந்தகை
ஊழிதொறு ஊழி உலகம்‌காக்க என
வில்‌தலைக்‌கொண்ட வியன்பேர்‌இமயத்து ஓர்‌
கல்கொண்டு பெயரும்‌எம்‌காவலன்‌ஆதலின்‌
வடதிசை மருங்கின்‌மன்னர்‌எல்லாம்‌

இடுதிறை கொடுவந்து எதிரீர்‌ஆயின்‌
கடற்கடம்பு எறிந்த கடும்போர்‌வார்த்தையும்‌
விடர்ச்சிலை பொறித்த வியன்பெருவார்த்தையும்,
கேட்டு வாழுமின்‌! கேளீர்‌ஆயின்‌
தோள்‌துணை துறக்கும்‌துறவொடு வாழுமின்‌!

தாழ்கழல்‌மன்னன்‌தன்திரு மேனி
வாழ்க! சேனா முகம்‌” என வாழ்த்தி,

இறை இகல்‌யானை எருத்தத்து ஏற்றி
அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கு என்.

தெளிவுரை :

அரசன்‌உரைத்ததைக்‌கேட்ட வில்லவன் கோதை என்னும்
அமைச்சர்‌, அரசே! நின்கொற்றம் பல்லாண்டு வாழ்க! நின்னை
ஒத்த அரசர்கள்‌நின்னை எதிர்த்துப்‌போர்‌செய்த காலத்தில்
கொங்கர்‌தம்‌போர்க்களத்தில்‌சோழரும்‌பாண்டியரும் முறையே ‌
தமது புலிக்‌கொடியையும்‌ மீன்‌ கொடியையும்‌ அங்கேயே துறந்து
ஓடிய செய்தி உலகம்‌யாவும்‌அறிந்த ஒன்றேயாம். எட்டுத்திக்குகளிலும்‌ பரவிய இச்‌செய்தியோடு கொங்கணர்‌, கலிங்கர், கருநாடர், வங்காளர், கங்கர்‌, வேலினையுடைய கட்டியர்,‌ஆரியர்‌
ஆகியோருடன்‌நீ போர்‌செய்து அவர்களை வெற்றி கொண்டு
அவர்கள்‌யானைப்‌படையை அடக்கிய வீரத்தன்மைக்கு இணை
யாக யாது உள்ளது?

“மற்றும்‌கங்கையாற்றில்‌நின்‌தாயைப்‌புனித நீராட்டிய போது
ஆரியமன்னர்‌ஆயிரவர்‌நின்னொடு போரிட்ட போது தனி ஒரு
வனாக நின்று நீ அவர்களை வெற்றிகொண்ட வீரக்‌காட்சியைக்‌
கண்டு கூற்றுவனும்‌வியப்புற்றான்‌. கடலை எல்லையாக உடைய
இந்நிலவுலகத்தைத்‌தமிழ்நாடாக ஆகுதற்குக்‌கருதினால்‌
எதிர்ப்பவர்‌யாவர்‌உள்ளனர்‌? ஆதலால்‌தெய்வச்‌சிலை செய்தற்‌
குரிய கல்‌வேண்டும்‌என்ற செய்தியைப்‌புகழ்‌மேவும்‌தமிழ்ப்‌
பெருமை சாற்றும்‌வில்‌, புலி, மீன்‌ஆகிய முத்திரைகளைப்‌பதித்து ஓலை அனுப்புக என்றான்‌.

இவ்வாறு வில்லவன்‌கோதை என்னும்‌அமைச்சர்‌உரைக்க,
அரசனது அமைச்சர்களில்‌ஒருவனான அழும்பில்‌வேள்‌என்பவன்‌
அரசனை நோக்கி, நமது நாவலந்தீவில்‌உள்ள அரசர்களின்‌
ஒற்றர்கள்‌நம்முடைய வஞ்சி மாநகரின்‌வாயிலைவிட்டு நீங்காத
வர்களாய்‌இருப்பார்கள்‌. ஆதலால்‌யானையின்‌மீது முரசு ஏற்றி
வடதிசைப்‌பயணம்‌குறித்த செய்தியை வீதிதொறும் சென்று
பறைசாற்றி உரைத்தால்‌அது அனைவருக்கும்‌நன்கு தெரியவ௫ம்
என்றான்‌.

அழும்பில் வேள் என்னும் அமைச்சன் உரைத்தவற்றைச் சேரன்
செங்குட்டுவன் நன்கு ஏற்றுக் கொண்டு தான் பெற்ற பரிசுப்
பொருள்களோடு வஞ்சி மாநகரத்தை அடைந்தான்.

முரசு அறைவோன்‌, “எம்‌மன்னன்‌வாழ்க அவன்‌ ஊழிக்‌காலம்‌ தொறும்‌ உலகத்தை நன்கு காப்பதாக வில்‌சின்னத்தை இமயத்தில்‌ பொறித்த அவன்‌அந்த இமயமலையிலிருந்து கண்ணகி என்னும்‌ தெய்வப்‌ பெண்ணுக்குச்‌சிலை அமைத்தற்குரிய கல்‌ஒன்றைக்‌கொண்டு வரச்‌செல்லுகின்றனன்‌. ஆதலால்‌வடதிசையில்‌உள்ள வேந்தர்கள்‌எல்லாம்‌திறைப்பொருள்களைக்‌கொண்டுவந்து சேர்த்து வரவேற்பு அளியுங்கள்‌. அவ்வாறு வரவேற்க
வில்லையானால்‌கடற்கடம்பு எறிந்த வீரச்‌செயலையும்‌, இமய
மலையில்‌வில்சின்னம்‌பொறித்த வெற்றிச்‌செய்தியும்‌மனத்திற்‌
கொண்டு நடந்து கொள்ளுங்கள்‌. இல்லை என்றால்‌பகையரசர்கள்‌
தமது மனைவியை விட்டுத்‌துறந்தவர்களாகி வாழ்வார்கள்‌. எம்‌ மன்னனது வீரக்‌கழல்‌வாழ்க. அவன்‌பேரும்‌புகழும்‌வாழ்க"
என்று யானையின்‌மீது ஏறி முரசு ஓலித்துச்‌செய்தியை அறிவிக்க
லானான்‌.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages