அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2020) முக்கிய செய்திகள்.

* உலகில் கொரோனா தொற்றால் 3,77,35,685 பேர் பாதிப்பு.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,81,246 பேர் மரணம்.

உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,83,42,310 பேர் மீண்டுள்ளனர்.

உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 83,12,129 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

* தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 6,61,264 ஆக உயர்வு- தமிழக சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,314.

சென்னையில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,667பேருக்கு தொற்று.

தமிழகத்தில் முதல் முறையாக 5 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்தது.

* நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ntaneet.nic.in அல்லது nta.ac.in ஆகிய இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பார் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

* சென்னையில் 11 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* கடலூர் தாழங்குடாவில் ரூ.13.06 கோடியில் கடல் அரிப்பு பாதுகாப்பு, மீன் இறங்குதளம் விரைவில் அமைக்கப்படும்.

மீன் இறங்குதளம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து பணிகள் விரைவில் தொடங்கும்- அமைச்சர் ஜெயக்குமார்.

கடல் அரிப்பு தடுக்கப்படுவதுடன் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும்-அமைச்சர் ஜெயக்குமார்.

* சென்னையில் வயதான தம்பதியிடம் 250 சவரன் கொள்ளை அடித்த வழக்கில் தங்க கட்டிகளாக 170 சவரன் மீட்பு.

தி.நகரில் தம்பதியை கட்டிப்போட்டு 250 சவரன் நகைகளை கொள்ளையடித்த் வழக்கில் ஏற்கமனவே 9 பேர் கைது.

கொள்ளையடித்த நகைகளை மும்பையில் தங்க கட்டிகளாக மாற்றியதை அறிந்து தனிப்படை போலீசார் நடவடிக்கை.

வயதான தம்பதிகளிடம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி மொய்தீன் தொடர்ந்து தலைமறைவு.

* காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்.

இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் குஷ்பு நீக்கம்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்திக்கிறார், குஷ்பு.

* இடஒதுக்கீட்டிற்கும், மாநில நிதிஉரிமைக்கும் விரோதமாக, மத்திய அரசுக்கு, தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை  உடனே “டிஸ்மிஸ்”  செய்ய ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும்"-மு.க.ஸ்டாலின் அறிக்கை.

*;சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ. 39,096க்கு விற்பனை.

திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்.

காவலர் பயிற்சி மேற்கொண்ட திருநங்கை, கடந்த 9ம் தேதி கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை.

* பாஜகவை தொடங்கியவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் 100வது பிறந்தநாளையொட்டி சிறப்பு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

* தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் நடந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.

போக்சோ சட்டம் முறையாக அமல்படுத்தப்படாததே சிறுமிகள் மீதான குற்றங்கள் அதிகரிக்க காரணம்: வழக்கறிஞர் அருள் (மனுதாரர்)

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

* திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு அறிவிப்பு. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.

* எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் - உச்சநீதிமன்றம் அதிரடி:

வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி. இயக்குனர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

எந்திரன் படக்கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

* வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு.

4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சத்தீஸ்கர் கிசான் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு.

* காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு:

முதலில் திமுக...

அடுத்ததாக காங்கிரஸ்...

தற்போது பாஜகவில்...

டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்து கொண்டார். குஷ்புவுக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

* நாகை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக ஓம்பிரகாஷ் மீனா நியமனம்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த செல்வநாகரத்தினம் இடமாற்றம் செய்யப்பட்டு ஓம்பிரகாஷ் மீனா நாகை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* பொறியியல் இறுதி செமெஸ்டர் தேர்வை முறையாக எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட்-அண்ணா பல்கலை. அதிரடி அறிவிப்பு.
இந்த வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்.

ஆன்லைன் தேர்வை சிலர் படுத்து கொண்டும், டீக்கடையில் உட்கார்ந்தும் எழுதிய நிலையில் நடவடிக்கை.

* புதுச்சேரி காராமணி குப்பத்தில் உள்ள அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று.

வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்.

*:ராசிபுரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை:

75 வயது  முதியவர் உட்பட 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு வந்த தகவலின் பேரில் விசாரணை.

விசாரணைக்குப் பிறகு 7 பேரை கைது செய்தனர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் இருவரையும் 7 பேர் 6 மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.

* 2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு.

புதிய ஏல முறைகள் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பு.

* தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். வன்னியர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினருக்கு தனித்தனி இடஒதுக்கீடு வழங்குக முதலமைச்சருக்கு - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கடிதம்.

* அரசு கல்லூரிகளில் அமல்படுத்தப்பட உள்ள ஒரே ஷிஃப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரி மனு.

டிசம்பர் 8 க்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி கெடு. தவறினால் உயர் கல்வி துறை செயலாளர்
ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என
எச்சரிக்கை.

* 15 ஆண்டுகளாக பேருந்துகளில்
மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம்
செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்காதது ஏன்?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

டிசம்பர் 10 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க தலைமை செயலாளர்,
போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவு.

2017-க்குப் பிறகு வாங்கப்பட்ட 4,381 பேருந்துகளில் ஒரு பேருந்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி இல்லை என மனுதாரர் குற்றச்சாட்டு.

* விழாக்காலத்தையொட்டி முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்- நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்.

இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையாக டிக்கெட் கட்டணத்தின் மூன்று மடங்கு தொகை பண வவுச்சர்களாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டு காலத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மூலதன செலவாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்.

* லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு  "ஆளூனர் தங்கப்பதக்கம்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட 3 ஆய்வாளர்களுக்கு ஆளுனர் தங்கப்பதக்கம் இன்று சென்னையில் வழங்கப்பட்டது.

கடலூர் ஆய்வாளர் சண்முகம், விழுப்புரம் ஆய்வாளர் சதீஷ், திருவாரூர் ஆய்வாளர் தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜெயந்த்முரளி, துணை இயக்குனர் ராதிகா ஆகியோர் வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages