உலக பெண் குழந்தைகள் தினம் இன்று அக்டோபர் 11. பெண் குழந்தைகள் பாதுகாக்க உறுதி ஏற்போம் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

உலக பெண் குழந்தைகள் தினம் இன்று அக்டோபர் 11. பெண் குழந்தைகள் பாதுகாக்க உறுதி ஏற்போம் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

உலக பெண் குழந்தைகள் தினம் இன்று அக்டோபர் 11. பெண் குழந்தைகள் பாதுகாக்க உறுதி ஏற்போம் - பாமக தலைவர் ஜி. கே. மணி         
        
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு அழகிய தேவைகள் வாழும் வீடு. இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் 55% பேர்.

பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும். குடும்பத்தில் ஆண் குழந்தைகள் வாரிசு என்றால் பெண் குழந்தைகள் பரிசு.பெண் குழந்தைகள் வீட்டுக்கும் நாட்டுக்கும் கண்கள்.
இன்றைய பெண் குழந்தைகள் நாளை பெற்றோர்களின் இறுதி நாளில் கண்ணீர் சிந்துபவர்கள்.பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு, பெண் சிசுக் கொலைகள் தடுக்க,பச்சிளம் பெண் குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு அனைவரும் உறுதி ஏற்போம்.         
       
பெண் குழந்தை தந்தைக்கு அடுத்த தாய்   
       
பெண் குழந்தை தாய்க்கு அடுத்த மாமியார்   
   
பெண் குழந்தை தைரியமாக இருக்கக் காரணம் தந்தை           
   
பெண் குழந்தை பாசமாக இருக்கக் காரணம் தாய்    
   
பெண் சந்தோசமாக இருக்கக் காரணம் கணவர் 

பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

பெண்கள் 21 வயதுக்கு முன்பு திருமணம் என்றால் பெற்றோர் சம்மதம் (ஒப்புதல் கையொப்பம்) கட்டாயம் வேண்டும் என சட்டம் அவசியம் தேவை.        
      
பெண் குழந்தைகள் விழிப்புணர்வில்,நலனில்,பாதுகாப்பில் பெற்றோர்கள் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டும். காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages