அக்னிப்புரட்சி இன்றைய (13.10.2020) முக்கிய செய்திகள்: - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.10.2020) முக்கிய செய்திகள்:

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.10.2020) முக்கிய செய்திகள்:

*உலகில் கொரோனா தொற்றால்  3,80,29,217 பேர் பாதிப்பு:

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,85,092 பேர் மரணம்.

உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,85,87,898 பேர் மீண்டனர்.

உலகில் கொரோனா பாதிப்புடன் 83,56,227 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,65,930 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,164   பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,84,429 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,371 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,117 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,12,320 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசி அம்மாள் காலமானார்.

வயது (93) முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சேலத்திலுள்ள லண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார்.

தூத்துக்குடிக்கு இன்று வருகை தர இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - மாவட்ட நிர்வாகம்.

* சென்னையில் 12 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* மேட்டுப்பாளையம், கும்பகோணம் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை:

கும்பகோணம் பதிவாளர் அலுவலக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.2.37 லட்சம் பறிமுதல்.

மேட்டுப்பாளையம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

* முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு தமிழக அளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்.

* முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, பாமக நிறுவனர் இராமதாசு இரங்கல்.

* முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல்.

* முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்.

அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

* தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஜி.கே.வாசன் இரங்கல், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல்.

* முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம்:

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் இறுதிச்சடங்கு செய்தார். சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.4,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்:
இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

இடைக்கால தடையை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு தொடர்ந்த வழக்கு.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.

* நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு:

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு குறித்த கமிட்டி பரிந்துரையை அமல்படுத்திய பிறகு வெளியிட கோரிக்கை.

அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

* தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.

செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

* விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்துவரப்படுகிறார் அமைச்சர் துரைக்கண்ணு.

மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னை அழைத்துவரப்படுகிறார்.

* புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?"-தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க  அனுமதி வழங்க வேண்டும்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி கருத்து.
தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு.

* நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது:

அணைக்கு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வரத்து எதிரொலி.

அணையில் இருந்து 14,900 கன அடிநீர் வெளியேற்றம்.

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி.

* திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு:

அரசு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைப்பு.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தணுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்:

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்தது.

* மலைப்பகுதிகளில் இ.பாஸ் நடைமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா?

மூன்று நாட்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற்று விளம்பரப்படுத்த வேண்டும்"-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* 10ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?"

"90க்கும் மேற்பட்ட பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளி 10வது படித்ததால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது"-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி.

* சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு:

கே.கே.நகர் அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணும் அரிவாள் வெட்டில் காயம்.

தனசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
அலுவலகத்தில் பணியாற்றும் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதி.

* மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு  கல்வி ஆண்டிலேயே  அமல்படுத்த முடியுமா?

மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு  கல்வி ஆண்டிலேயே  அமல்படுத்த கோரி வழக்கு.

* பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

* தமிழகத்தில் 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு இருக்கிறது - உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் அரசியல் ஸ்டார், சினிமா ஸ்டார், கிரிக்கெட் ஸ்டார் ஆகிய 3 ஸ்டார்களுக்கு மட்டுமே மதிப்பு!" - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தமிழகத்தில் மாற்றுதிறன் விளையாட்டு வீரர்களை கண்டு கொள்வதே இல்லை.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நவ.3ம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

* முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி.

சேலத்தில் முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

* ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி விடுதலை:

370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்ட உடனேயே மெகபூபா உள்ளிட்டோர் கைது.

14 மாத சிறைவாசத்திற்கு பிறகு மெகபூபா முப்தி விடுதலை- ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages