அக்னிப்புரட்சி இன்றைய (17.10.2020) முக்கிய செய்திகள்.
* உலகில் கொரோனா தொற்றால் 3,95,65,948 பேர் பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 11,08,617 பேர் உயிரிழப்பு.
உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,96,48,639 பேர் மீண்டனர்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்புடன் 88,08,692 பேர் சிசிக்சை பெற்று வருகிறார்கள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,132 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,88,944 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,586 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,005 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,32,708 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 16 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்...
* நீட் தேர்வு முடிவு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி:
திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.
* உலக பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக தொடங்கியது;
கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக தசரா விழாவில் பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அனுமதி.
* நீட் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து இணையத்தில் இருந்து தேர்வு புள்ளிவிபர முடிவுகள் நீக்கம்.
தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் புதிய பாடதிட்டத்தால் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்.
ஏழை, எளிய மாணவர்கள் பலன்பெறுவது தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளது - செங்கோட்டையன்.
* திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் இளைய மகன் அன்பழகன்(34) கொரோனா பாதிப்பால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
* ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி திருப்பம்; முதல் முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,384 குறைவு: சவரன் ரூ. 37,440-க்கு விற்பனை.
* அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.
அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்.
* இடஒதுக்கீடு மசோதா குறித்த ஆளுநரின் முடிவுக்கு பிறகே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்.
* மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு விவகாரம்: "ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம்" - அமைச்சர் ஜெயக்குமார்.
* தமிழகத்தில் அதிமுகவை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க தகுதி இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
* நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
தேர்வு எழுதியவர்களை விட தேர்வானோர் எண்ணிக்கை அதிகமானதால் சர்ச்சை எழுந்தது
நீட் தேர்வு முடிவு பட்டியல் தேர்வாணைய இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது
திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் -88,889 தேர்ச்சி பெற்றவர்கள் - 3,536
உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் எழுதியவர்கள் - 37, 301 தேர்ச்சி பெற்றவர்கள் - 12,047
தெலுங்கானாவில் தேர்வு எழுதியோர் - 50,392 தேர்ச்சி பெற்றவர்கள் - 1,738
* குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மைசூரு தசரா போல குலசையில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
குலசை தசரா திருவிழாவில் வேடம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஆன்லைனில் புக் செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி.
கொடியேற்றம், சூரசம்ஹாரம், கொடியிறக்க நாளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.
* இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்"
தமிழக போலீசாருக்கு இன்டர்போல்"ரெட் அலர்ட்"
தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி பொன்சேகா கைது.
ஏற்கனவே மற்றொரு நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா தமிழகத்தில் உயிரிழப்பு.
இதேபோல் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல்.
* வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம். அக்.19-ல் மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும்.
* அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது- அமைச்சர் கே.பி.அன்பழகன்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரித்துள்ளார்.
* தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக வெட்கப்பட வேண்டும்"
அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.
“தனது இறுதி மூச்சுக்கு முன் சுதந்திரப் போராட்ட வீரர் என அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்"
தியாகிகள் ஓய்வூதியம் வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி:
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில் 1,615 மாணவர்கள் தேர்ச்சி.
4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? குழப்பங்கள்? -நீட் தேர்வு முடிவுகள் குளறுபடி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து.
தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட 2,570 பேர் குறைவாகவே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் - ஸ்டாலின்.
நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் என்பது இந்த ஆண்டும் நிரூபணம் ஆகியுள்ளது - ஸ்டாலின்.
* ஏமாற்று வேலைகள் நடைபெறும் என்பதால்தான் ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்க்கிறோம் - நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நீட் மதிப்பெண் மட்டுமே தகுதியெனில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நீக்கி விடலாமா ? - சீமான்.
அதிக மருத்துவ இடங்களை கொண்ட தமிழகத்தில் வட இந்திய மாணவர்கள் கல்வி பயில உள்ளனர் - சீமான்.
* உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ தரப்பின்மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம்.
அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை
பார்க்கின்றனர் - ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு.
"வழக்கை விரைந்து விசாரிக்ககோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்குவதற்கான மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை".
வரும் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க அரசுக்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8 வது முறையாக தரப்பட்ட அவகாசம் 24 ஆம் தேதியுடன் முடிகிறது.
* கொரோனாவுக்கான தடுப்புமருந்து தயாரானவுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு மருந்து விநியோகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்.
* திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம்.
சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
No comments:
Post a Comment