அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2020) முக்கிய செய்திகள்.

* இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பும், இறப்பு விகிதமும் வெகுவாகக் குறைந்து வருகின்றன.

நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்து 224 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்ததால், இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.

98 நாட்களுக்குப் பின் உயிரிழப்பு குறைந்துள்ளது. 70 லட்சத்து 75 ஆயிரம் பேர் பெருந்தொற்றிலிருந்து குணமான நிலையில், 6 லட்சத்து 69 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,09,005 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 764 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,95,672 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 31 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,924 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,019 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,67,475 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,606

* தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கடைகள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்.

* சென்னையில் 24 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை பின்னடைவு! தொடர் தீவிர சிகிச்சை!

சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை!

கடந்த 13ஆம் தேதி மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது!
விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சைக்கு பின், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்!

* விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத மாதிரிகளை மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு.

தஞ்சை, நாகை, திருவாரூரில் இருந்து சேகரித்த மாதிரிகள் சென்னை மண்டல இந்திய உணவு கழகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

நெல்லின் ஈரப்பதம் குறித்து அக்.27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்தியக் குழு தகவல்.

நெல்லின் ஈரப்பத தன்மையை 17% இருந்து 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்ததால் மத்திய குழு ஆய்வு.

* சாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார்.

ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சாங்கை உருவாக்கிய லீ குன் ஹீ காலமானார்.

லீ குன் ஹீவின் இறப்புக்கான காரணத்தை சாம்சங் குழுமம் விளக்கவில்லை.

* 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராத ஆளுநரின் செயல் அதிகார எல்லை மீறில்:

உரிமையை நிலைநாட்ட முடியாத முதல்வர் என்மீது பாய்வதை விட்டுவிட்டு ஆளுநரிடம் உரிமைக்குரலை எழுப்ப வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வரை திமுக போராட்டம் ஓயாது- மு.க.ஸ்டாலின்.

* 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதமின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

திருமாவளவனின் கருத்தை கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழக பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் நவ.6 முதல் டிச.6ம் தேதி வரை பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நடைபெறவுள்ளது - எல்.முருகன்.

* 7.5 % உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்கிறார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுக்க இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

*:விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாரதி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

*:வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி.

* திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி- தேவஸ்தானம்.

அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை உறுதி.

* தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் தீவிர மூச்சுத் திணறலும் இருக்கிறது; நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளது!" - மருத்துவமனை அறிக்கை.

* திரௌபதி படத்தை அடுத்து இயக்குநர் மோகன் இயக்கவிருக்கும் படத்திற்கு ருத்ர தாண்டவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages