மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவர், கடையில் ஒரு பகுதியில் நூலகம் அமைத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்:
தூத்துக்குடியை சேர்ந்த பொன்.மாரியப்பன் என்பவர் சிறிய சலூன் நடத்தி வருகிறார்.சலூனில் ஒரு பகுதியை நூலகமாக மாற்றியுள்ளார். அதில் தான் கற்றதை மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.தனது கடையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை படிக்கிறார் என்றால், அவருக்கு பொன்.மாரியப்பன் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கிறார். இது ஒரு உத்வேகம், அளிக்கும் முயற்சி. இவ்வாறு குறிப்பிட்ட மோடி தொடர்ந்து மாரியப்பனிடம் தமிழில் உரையாடினார்.
மாரியப்பனிடம் பிரதமர் மோடி தமிழில் பேசியதாவது;
வணக்கம் மாரியப்பன், நல்லா இருக்கீங்களா?
மாரியப்பன்: நலமாக உள்ளேன்.
மோடி: இந்த லைப்ரரி ஐடியா எப்படி வந்தது.
மாரியப்பன்: நான் 8 ம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். அதற்கு மேல் படிக்க முடியவில்லை. படித்தவர்களை பார்க்கும் போது ஏக்கம் இருந்தது. இதனால், நூலகம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதனால், இந்த முயற்சி எடுத்து இவ்வாறு செய்கிறேன்.
மோடி: உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும்.
மாரியப்பன்: எனக்கு திருக்குறள் பிடிக்கும்.
மோடி:நல்வாழ்த்துகள்.
மாரியப்பன்: பிரதமரிடம் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment