அக்னிப்புரட்சி இன்றைய (29.10.2020) முக்கிய செய்திகள்:
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 756 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,98,487 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 35 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,053 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,087 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,83,464 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை:நகரின் பல சாலைகளில் வெள்ளம்.
நள்ளிரவில் கனமழை கொட்டிய நிலையில் தற்போது விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தது. சுரங்கப்பாதை , மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியது.
*;சென்னையில் 28 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
" கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் அமலாக்கத்துறையால் கைது.
கறுப்புப் பண மோசடி தொடர்பாக 6 மணி நேர விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை கைது செய்தது.
* மீலாதுன் நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து.
இறைதூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் பின்பற்றினால், வாழ்வில் ஏற்றம் அடையலாம்.
இத்திருநாளில் உலகில் அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் தவழ வாழ்த்துக்கள் - முதலமைச்சர்.
* பாரம்பரியமிக்க MS.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை COVID-19- னால் ஏற்பட்டுள்ள பாலின வகையிலான தாக்கம் குறித்து பதிவு செய்த ஊடகவியலாளர்களை, 3 மொழிகளில் 'கூட்டு ஆய்வுக்காக' தேர்ந்தெடுத்துள்ளது
இந்த ஆய்வுக்கான முதல் தமிழ் ஊடகவியலாளராக தி இந்து தமிழ் நாளேட்டின் நந்தினி V தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
* தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்.
* இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது:
செப்டம்பர் 30க்குள் இறுதி பருவத் தேர்வு நடத்தாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம்.
இறுதி பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு தகவல்.
இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை"
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கில் யுஜிசி பதில் மனு.
* சென்னையில் 22 ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.30 குறைந்து ரூ.4,738 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 குறைந்து ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ண சந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து.
பணிமூப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என பேராசிரியை கீதா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை.
உரிய விதிமுறைகளை பின்பற்றி 3 மாதங்களில் கல்லூரி கல்வி இயக்குநரை நியமிக்க அரசுக்கு உத்தரவு.
* தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.5 கோடி பணம் பறிமுதல்.
கணக்கில் வராத ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கண்டுபிடிப்பு - வருமானவரி துறை தகவல். தமிழகம் முழுவதும் நேற்று 22 இடங்களில் வருமான வரிசோதனை.
* “7.5 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அறிக்கை என்னுடைய அறிக்கை அல்ல.
ஆனால் அதில் குறிப்பிட்ட உடல்நிலை குறித்து தகவல்கள் அனைத்தும் உண்மை. அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்- ரஜினிகாந்த் ட்வீட்
* சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்களுக்கான தேதிகளை அறிவித்தது திமுக:
“தமிழகம் மீட்போம்" என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள்.
காணொலி காட்சி மூலமாக நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு.
முதல் கூட்டம் நவம்பர் 1ம் தேதி ஈரோட்டில் நடைபெறுவதாகவும் அறிவிப்பு.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கு:
"நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும்"-உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து.
"சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேறாவிட்டால் நீட் தேர்வு எழுதிய 8 மாணவர்கள் மட்டுமே சேர
வாய்ப்பு"
"ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை"
"ஆனாலும், பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிகள் வகுக்கப்படுகிறது"
* அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
2 ஆம் கட்டம், 3 ஆம் கட்டமாக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு, செயல்திறன் மேம்படுத்தப்படும்.
ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 2021 முதல், மார்ச் 2031-க்குள் செயல்படுத்தி முடிக்க இலக்கு.
* இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது?
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்ச்சி தொடர்பாக தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்றம் கேள்வி.
அரியர் தேர்வு ரத்து குறித்து குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாத பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கண்டனம்.
அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசு முடிவில் உடன்பாடு இல்லை என யு.ஜி.சி. விளக்கம்.
தமிழக உயர்கல்வி துறையும், யுஜிசி-யும் பதில் மனு தாக்கல் செய்ய நவம்பர் 20 ஆம் தேதி வரை அவகாசம்.
* ஆந்திரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவ.2 முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு.
* பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம்.
வேல் யாத்திரை என்ற பெயரில் கலவரத்திற்கு பாஜக திட்டம்" - கே.பாலகிருஷ்ணன்.
* மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசாணை.
மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
* வெங்காயம் விளைவிப்பதற்கான விதைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது மத்திய அரசு.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
No comments:
Post a Comment