சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம் அறிவோம்!- மருத்துவர் இராமதாசு அய்யா

35. இளங்கோவடிகள் கண்ணகியின்
கோயிலை நண்ணி ஏத்துதல்

“யானும்‌ சென்றேன்‌ என்‌ எதிர்‌ எழுந்து;
தேவந்திகைமேல்‌ திகழ்ந்து தோன்றி,
வஞ்சி மூதூர்‌ மணிமண்ட பத்திடை
நுந்தை தாள்‌ நிழல்‌ இருந்தோய்‌ நின்னை
அரைசு வீற்றிருக்கும்‌ திருப்பொறி உண்டென்று

உரை செய்தவன்‌ மேல்‌ உருத்து நோக்கிக்‌
கொங்கு அவிழ்‌ நறுந்தார்க்‌ கொடித்தேர்‌ தானைச்‌
செங்குட்‌ டுவன்தன்‌ செல்லல்‌ நீங்கப்‌
பகல்செல்‌ வாயில்‌ படியோர்‌ தம்முன்‌
அகல்‌ இடப்‌ பாரம்‌ அகல நீக்கிச்‌

சிந்தை செல்லாச்‌ சேண்நெடுந்‌ தூரத்து
அந்த மில்‌ இன்பத்து அரசாள்‌ வேந்து” என்று
என்திறம்‌ உரைத்த இமையோர்‌ இளங்கொடி
தன்திறம்‌ உரைத்த தகைசால்‌ நன்மொழி
தெரிவுறக்‌ கேட்ட திருத்தகு நல்லீர்‌ !

பரிவும்‌ இடுக்கணும்‌ பாங்குற நீங்குமின்‌
தெய்வம்‌ தெளிமின்‌ தெளிந்தோர்ப்‌ பேணுமின்‌
பொய்யுரை அஞ்சுமின்‌, புறஞ்சொல்‌ போற்றுமின்‌,

ஊன்ஊண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்,
தானம் செய்யுமின் தவம்பல தாங்குமின்,

செய்ந்நன்றி கொல்லன் மின், தீநட்பு இகழ்மின்,
பொய்க்கரி போகன்மின், பொருள் மொழி, நீங்கன்மின்,
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்,
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்,
பிறர் மனை அஞ்சுமின், பிழைஉயிர் ஓம்புமின்,

அறமனை காமின்‌, அல்லவை கடிமின்‌,
கள்ளும்‌ களவும்‌ காமமும்‌ பொய்யும்‌
வெள்ளைக்‌ கோட்டியும்‌ விரகினில்‌ ஒழிமின்‌,
இளமையும்‌ செல்வமும்‌ யாக்கையும்‌ நிலையா
உளநாள்‌ வரையாது ஒல்லுவது ஒழியாது

செல்லும்‌ தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்‌,
மல்லல்‌ மா ஞாலத்து வாழ்வீர்‌ ஈங்கு” என.

தெளிவுரை:
இங்கு இச்சிலப்பதிகாரக்‌ காப்பியத்தை இயற்றிய இளங்கோ
வடிகள் தன்னுடைய கூற்றாக உரைக்கலானார்‌ என்பதாம்‌.

யான்‌ கண்ணகியின்‌ கோயிலுக்கு உள்ளே செல்ல, என்‌ எதிரே
தெய்வநங்கையான கண்ணகி தேவந்தியின்‌ மீது ஆவேசித்து,
வஞ்சிமாநகரில்‌ கொலுமண்டபத்தில்‌ நீ, உன்‌ தந்தையான
சேரலாதன்‌ அருகில்‌ அமர்ந்திருந்தாய்‌. அங்கு வந்த நிமித்திகன்‌
ஒருவன்‌ உன்‌ தோற்றப்‌ பொலிவையும்‌, முகக்குறிப்பையும்‌ கண்டு
நீ அரசருக்குரிய எல்லா இலக்கணங்களும்‌ கொண்டுபொருந்த
உள்ளனை. நீயே ஆட்சி செலுத்தும்‌ அரசன்‌ ஆவாய்‌! என்று
கூறினான்‌. அவ்வாறு கூறிய சோதிடன்‌ சொற்களை விரும்பாத
வனாய்த்‌ தனக்கு எத்தகைய செல்வமும்‌ ௮ரசும், தேரும்,
சேனையும்‌ வேண்டாம்‌ என்று உரைத்து அரசவாழவைநின் தமை
யனான செங்குட்டுவன்‌ அடைக என்று கூறி அவன்‌ வருத்தத்தைப்
போக்கினாய்‌. பின்பு நெடுந்தொலைவில்‌ உள்ள கீழ்த்திசையில்
விளங்கும்‌ குணவாயில்‌ கோட்டத்தில்‌ தவ வாழ்க்கையில் மேவிப்
பேரின்ப வீட்டினை ஆளும்‌ வேந்தன்‌ ஆயினை!‌ என்று தெய்வ
மகளான கண்ணகி கூறினாள்‌. ஆதலான் பெருமைக்குரிய புனித
மிகு இவ்வரலாற்றை நான்‌ கூறக்‌ கேட்ட நல்லீராகிய நீங்கள்‌
இனிது விளங்குவீராக!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages