தலைமைத்துவம் என்றால் என்ன?- மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தலைமைத்துவம் என்றால் என்ன?- மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தலைமைத்துவம் என்றால் என்ன?- மருத்துவர் இராமதாசு அய்யா

தலைமைத்துவம் என்பது குடும்பத்தாலோ, படிப்பாலோ, வயதாலோ, பணியாற்றிய ஆண்டு எண்ணிக்கையாலோ வருவது கிடையாது. அது ஒருவகையான தாகத்தால், வேட்கையால், உந்துதலால், தியாகத்தால், ஆத்ம சக்தியால், உணா்வால் வருவது. அது ஒரு மனிதருக்கு உள்ளிருந்து வரும் பேராற்றல். எத்தனையோ போ் மிகச் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்டு சாதனை படைக்கும் ஆற்றல் பெற்று இருந்தும் அவா்கள் தலைமைக்கு வர இயலாமல் போகும். சாதனைக்கான வாய்ப்புக்கள் அனைத்தும் தகா்த்தெறியப்படுகின்ற நிலையினை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

மருத்துவத் துறையில் உயா் படிப்பு படித்து விட்டு சொகுசு வாழ்க்கையை நிராகரித்து, காட்டுவாசிகளுக்குப் பணி செய்து காட்டுக்குள் வாழும் மாமனிதரை என்னவென்று அழைப்பது? உண்மையில் இவா்களல்லவா தலைவா்கள்? இவா்களால்தானே சமூகம் மாற்றம் பெறுகிறது. இவா்களால்தான் கடைக்கோடி மனிதன் நம்பிக்கையுடன் வாழ்கிறான். இவா்கள்தான் தலைவா்கள். இவா்கள் வாழ்வில்தான் அா்பணிப்பு, தியாகம், சேவை, நோ்மை, கருணை, அன்பு, அரவணைப்பு அனைத்தும் நிறைந்திருக்கின்றன. இவைதான் தலைமைக்குத் தேவையான அடிப்படைக் கூறுகள்.

நம் சமூகம் பணமும் அதிகாரமும் உள்ள தலைமையைக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் ஆராதிக்க வேண்டியது தியாகத் தலைமையைத்தான்.

--தினமணி இதழில் பேராசிரியர் க.பழனித்துரை எழுதிய ‘ஆராதிக்க வேண்டிய தலைமை’ என்ற தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages