சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சிலப்பதிகாரம்  அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

37. நூற்‌ கட்டுரை
இது செந்தமிழ்‌ வழக்குடைய தமிழ்நாட்டின்‌ நில அமைப்பு,
மற்றும்‌ அறம்‌ பொருள்‌ இன்பம்‌ வீடு என்னும்‌ நாற்பொருள்‌
தன்மையும்‌ மக்களின்‌ பண்பும்‌ சாற்றப்படும்‌ சிலப்‌பதிகாரம்‌
என்னும்‌ சிறப்புப்பெறும்‌ காப்பியப்‌ பெருமை நவிலப்‌ படுவதாம்‌.

குமரி, வேங்கடம்‌, குண, குட கடலா
மண்திணி மருங்கின்‌ தண்தமிழ்‌ வரைப்பில்‌
செந்தமிழ்‌, கொடுந்தமிழ்‌ என்று இரு பகுதியின்‌
ஐந்திணை மருங்கின்‌ அறம்பொருள்‌ இன்பம்‌
மக்கள்‌ தேவர்‌ என இரு சார்க்கும்‌,

ஒத்த மரபின்‌ ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின்‌ அகனும்‌, புறனும்‌
அவற்றுவழிப்‌ படூஉம்‌ செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும்‌, எழாலும்‌, பண்ணும்,‌ பாணியும்‌,

அரங்கு, விலக்கே, ஆடல்‌ என்று அனைத்தும்
ஒருங்குடன்‌ தழீஇ உடம்படக்‌ கிடந்த,
வரியும்‌, குரவையும்‌, சேதமும்‌, என்று இவை
தெரிவுறு வகையான்‌ செந்தமிழ்‌ இயற்கையில்‌
ஆடிநல்‌ நிழலின்‌ நீடு இருங்குன்றம்‌

காட்டு வார்‌ போல்‌ கருத்து வெளிப்படுத்து,

மணிமேகலை மேல்‌ வரைப்பொருள்‌ முற்றிய.

சிலப்பதிகாரம்‌ முற்றும்‌.

தெளிவுரை :
நிலப்பரப்பின்‌ வகையுடைய இவ்வுலகத்தில் வடக்கே
வேங்கடமும்‌ கிழக்கே குமரிக்‌ கடலும்எல்லையாகக்‌ கொண்டு
அழகிய தமிழ்‌ பேசும்‌ செந்தமிழ்‌ நாடு இனிது விளங்குவதாகும்‌.
இங்குச்‌ செந்தமிழ்,கொடுந்தமிழ்‌ என்னுமாறு இரு பகுதிகள்‌
உள்ளன. அதனுள் குறிஞ்சி, முல்லை, மருதம்‌, நெய்தல்‌, பாலை
என்றும்‌ ஐந்து‌ வகையான நிலப்‌ பரப்பும்‌ விளங்குவன. அறம்‌,
பொருள்‌, இன்பம்‌, என்னும்‌ மூன்றினையும்‌ அங்கு வாழும்‌ மக்கள்‌
பேணிக்காத்து ஒழுகினார்கள்‌. மக்கள்‌, தேவர்‌ என இருவகை
யினர்க்கும்‌ ஒத்த மரபில்‌ ஒழுக்க நியதியில்‌ அமைந்த எழுத்துடன்‌
அமைந்த சொல்லும்‌, அதனிடை தோன்றும்‌ பொருளும்‌ இணைந்த
குறைவற்ற பாடல்கள்‌ விளங்குவன.

இவ்வாறு குறைவில்லாது அமையப்பெற்ற பாடல்கள்‌ அகத்‌
துறையிலும்‌ புறத்துறையிலும்‌ ஆயின. இவற்றோடு இசைப்‌
பாடலும்‌, யாழிசையும்‌, தாளமும்‌, அரங்கின்‌ அமைப்பும்‌, விலக்கு
உறுப்புகளும்‌ அமைவன. இத்தகைய சிறப்பானது தமிழுக்கே
உரியதாக ஒரு கண்ணாடியைக்‌ கொண்டு பெரிய மலையொன்றின்‌
நிழலையே காணச்‌ செய்வது போன்று ஆகுதலை ஒக்கும்‌.
மணிமேகலை என்னும்‌ காப்பியம்‌ கூடிய சிலப்பதிகாரம்‌ என்னும்‌
காப்பியம்‌ நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages