இலக்கிய இன்பம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

இலக்கிய இன்பம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

இலக்கிய இன்பம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஐங்குறுநூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றினை உள்ளிட்ட  சங்க இலக்கிய நூல்களை படித்து என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களும்,  மற்றவர்களும் அறிவதற்காக அவற்றின் முக்கிய அம்சங்களை முகநூலில் பதிவிட்டு வந்தேன்.

அடுத்ததாக ’’சிலப்பதிகாரம் அறிவோம்” என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தை சுருக்கமாக 37 அத்தியாயங்களில்  வழங்கினேன். பல்லாயிரக்கணக்கானோர் அதை படித்து, ரசித்து மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து இப்போது இரட்டைக் காப்பியங்களில்  இரண்டாவதான மணிமேகலை இலக்கிய நூலை படித்து வருகிறேன். மிகவும் சுவையாக இருக்கிறது.

வாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி... அழகான பசி... ஒரு முறை சுவைக்கப்பழகி விட்டால்  அது தொடர்ந்து வரும்.

உங்களில் வாய்ப்புள்ள அனைவரும்  ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒதுக்கி இலக்கியங்களை படியுங்கள்... மகிழுங்கள்... இலக்கிய இன்பம் பெறுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages