செயற்கரிய சாதனையாளர் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் அன்பு மகன் மருத்துவர் இரா. அன்புமணி M.P அவர்கள் மேலும் உயர்வைப் பெற்று ,உயரிய சாதனைகள் படைத்து நூறாண்டு கடந்து நீடூழி வாழ நமது பா.ம.க அனைத்து அமைப்புகளின் சார்பில் இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
"சமூகநீதிக்காவலர்" மருத்துவர் அய்யா அவர்களின் அன்பு மகன், பா.ம.க இளைஞர் அணித் தலைவர், இந்திய நாட்டின் இணையற்ற சாதனைகள் படைத்திட்ட சுதகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் இரா. அன்புமணி M.P அவர்களுக்கு நமது பா.ம.க அனைத்து அமைப்புகளின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிங்கத்திற்கு பிறந்தது சிங்கம்தான் என்பதை மருத்துவர் அய்யா அவர்களின் வழியில் சீரிப் பாய்ந்து சாதனைப் படைத்து நிரூபித்து வருகிறார்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்"
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப இந்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று படைத்திட்ட சாதனை போற்றப்படுகிறது. மருத்துவர் இரா. அன்புமணி M.P பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து மருத்துவக் கல்லூரியில் மருத்துவராய் வளர்ந்து, அரசியலில் நுழைந்து, மத்திய அமைச்சராக உயர்ந்து சாதனைப் படைத்து பாராட்டுப் பெற்றுவரும் இன்று வரை நான் நன்கு அறிந்து வருகின்றேன். அவரது வீரதீர விளையாட்டு,தலைசிறந்த இறகுப்பந்து விளையாட்டு வீரர், பள்ளி மாணவப் பருவத்தில் ஏரிகளில் தூண்டில் மீன் பிடிக்கும் உற்சாகம், ஆழ்கடல் துண்டில் மீன்பிடித்தல், அறிவாற்றல், தொலைநோக்குப் பார்வை, ஆளுமைப் பண்புகள், நிர்வாகத்திறன் போன்றவற்றை இன்றும் நான் பார்த்து வருகிறேன் பெருமையளிக்கிறது. சிறப்புக்குரியது. நமது சொத்தாக மதிக்கிறோம்.
இந்திய அரசின் தனது துறையில் "108 அவசர ஊர்தித் (ஆம்புலன்ஸ்)திட்டம், தேசிய கிராமப்புறத் திட்டம் (NATIONAL RURAL HEATH MISSION), புகையிலை ஒழிப்பு, போலியோ ஒழிப்பு உள்ளிட்ட நிறைய சாதனைகள். இந்தியத் தலைவர்கள், உலக நாட்டுத் தலைவர்கள் பாராட்டு, உயர்ந்த விருதுகள், ஐ.நா. அவை பொதுச்செயலாளர் மரபு கடந்து அலுவலகம் வந்து பாராட்டு என்பன எல்லோரையும் பிரமிக்க வைத்திருக்கின்றன.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு மருத்துவர் இரா.அன்புமணி M.P அவர்களை பா.ம.கவின் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அய்யா அவர்களால் அறிவித்தோம். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிட்டியது. மருத்துவர் அய்யா அவர்கள் வழியில் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு, அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா கல்விக் கொள்கை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வேளாண் மேம்பாடு, உழவர் நலன், இலவச தரமான மருத்துவம், தொழில் வளர்ச்சி,மகளிர் நலன், நீர் மேலாண்மைத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைசிறந்த நிர்வாகம் உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்கள் அவருக்கு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. உலகையே உலுக்கி கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கும், மனிதகுலத்தையே புரட்டிப்போட்டு முடங்க வைத்திருக்கும் கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடக்கு உள்ளிட்ட பாதுகாப்புக்கு முதல் குரல் கொடுத்தவர்.
மருத்துவர் அய்யா அவர்களின் கனவு நனவாக, நம் அனைவரின் இலக்கு வெற்றிபெற அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என்னும் முப்படைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அவரது பிறந்த நாளில் நம இயக்கத்தினர் அனைவரும் உறுதி ஏற்போம்.
சுமைநாயகர் மருத்துவர் இரா.அன்புமணி M.P அவர்கள் மென்மேலும் செயற்கரிய சாதனை படைத்து, உடல் ஆரோக்கியத்துடன், குடும்ப நலமுடன், நிலைத்த பெரும்புகழுடன் நூறாண்டு கடந்து நீடூழி வாழ இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை நமது பா.ம.க அனைத்து அமைப்புகளின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
செயற்கரிய சாதனையாளர் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் அன்பு மகன் மருத்துவர் இரா. அன்புமணி M.P அவர்கள் மேலும் உயர்வைப் பெற்று ,உயரிய சாதனைகள் படைத்து நூறாண்டு கடந்து நீடூழி வாழ நமது பா.ம.க அனைத்து அமைப்புகளின் சார்பில் இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
செயற்கரிய சாதனையாளர் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் அன்பு மகன் மருத்துவர் இரா. அன்புமணி M.P அவர்கள் மேலும் உயர்வைப் பெற்று ,உயரிய சாதனைகள் படைத்து நூறாண்டு கடந்து நீடூழி வாழ நமது பா.ம.க அனைத்து அமைப்புகளின் சார்பில் இதயங்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment