அக்னிப்புரட்சி இன்றைய (09.10.2020) முக்கிய செய்திகள்
* உலக அளவில் கொரோனா தொற்றால் 3,67,34,606 பேர் பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,66,341 பேர் மரணம்.
உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,76,29,679 பேர் மீண்டுள்ளனர்.
உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 80,38,586 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,288 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,79,424 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 10,120 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,357 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 5,91,811 பேர் குணமடைந்துள்ளனர்.
* ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்":
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.
"ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசு நடவடிக்கைகளை, உத்தரவுகளை, வழிகாட்டுதல்களை மதிக்கவில்லை".
உயர்நீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு தீர்ப்பு வழங்கியதாக கூறுவது தவறான வாதம் - தமிழக அரசு.
* சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம். கொரோனா முன்னெச்சரிக்கையாக காணொலி காட்சி வாயிலாக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
* மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.
* திருச்சி: சமயபுரம் பெருவளை வாய்க்காலில் தவறி விழுந்த 2 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டன.
இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வாய்க்காலில் தவறி விழுந்த நரேஷ்(4), தர்ஷினி(6), சடலமாக மீட்பு.
* இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.
மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.
* திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சலூன் கடைகளை அடைத்து முடித்திருத்துவோர் போராட்டம்.
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முடி திருத்துவோரின் மகளுக்கு நீதி கோரி சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன.
* நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி:
மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு.
நடிகர் சூரி அளித்த புகாரில் அடையாறு காவல்நிலையம் நடவடிக்கை - விசாரணை.
2015ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைபடத்தில் நடித்த சூரிக்கு 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்துள்ளது.
சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுத்ததாக புகார்.
* தொல்லியல்துறை பட்டயப்படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கண்டனத்தை வெளிப்படுத்தியதையடுத்து தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்ததற்கு வரவேற்கிறேன் -மு.க.ஸ்டாலின்.
* காவலர் காசிராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்:
திருப்பூர்: பெருமாநல்லூரில் மாஸ்க் அணியாத நபரிடம் சாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜன் ஆயுதப்படைக்கு மாற்றம்: சாதி பெயர் கேட்ட வீடியோ வைரல் ஆனதால் எஸ்.பி.திஷாமிட்டல் நடவடிக்கை.
* அந்தமானை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. - இந்திய வானிலை மையம்.
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு:
ஒரு கிராம் தங்கம் ரூ.4,842ஆக உள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.38,736-க்கு விற்பனை.
* கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்.
மகளை மீட்கக்கோரி தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை.
நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் சவுந்தர்யாவும், சுவாமிநாதனும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
* திண்டுக்கல் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
- சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயசந்திரன் அறிவித்துள்ளார்.
அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 22ம் தேதி காலை 8 மணி முதல் 4 மணி வரை தேர்தல்.
* கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம் செய்த விவகாரம் : பெண்ணின் தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவு சிறிது நேரத்திற்கு தள்ளி வைப்பு.
* கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். அனைத்து வகை விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்"
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி கருத்து.
“கபடி, கால்பந்து, ஹாக்கி, ஓட்டம் உள்ளிட்ட பல விளையாட்டுகள் சிறப்பானவை" அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் - நீதிபதிகள்.
* கள்ளக்குறிச்சி: எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆட்கொணர்வு வழக்கு விசாரணை முடித்து வைப்பு.
* வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.
வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே இருக்கும்.
ஜனவரி- மார்ச் மாத 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக மாறும். நம்பிக்கையை நோக்கி இந்தியாவின் மனநிலை சென்று கொண்டிருக்கிறது - ரிசர்வ் வங்கி ஆளுநர்.
செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக் கட்டத்தில் படிப்படியாக குறையும் - சக்திகாந்த தாஸ்.
* அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விளாத்திகுளம் மார்க்கண்டேயன் திமுக-வில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்க்கண்டேயன் இணைந்தார்.
* தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வி தகுதியில் தமிழ் மொழியை சேர்த்ததற்காக பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி:
தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி - முதல்வர்.
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.
* +1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்று தரப்படும்.
தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் - பள்ளிக்கல்வித்துறை.
* தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும்.
அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
* தொல்லியல்துறை அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை முதலிலேயே சேர்க்கப்படாதது ஏன்?:
எதிர்ப்புக்குரல் எழுந்தால்தான் தமிழ் சேர்க்கப்படுமா? - உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி.
மொழிகள் உணர்வோடு தொடர்புடையவை என நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கருத்து.
தொல்லியல் துறை பட்டயப் படிப்பு அறிவிப்பாணையில் தமிழ் மொழியைத் தவிர்த்த அதிகாரி யார்?
செம்மொழியான தமிழ் மொழியை மறந்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
அரசின் இது போன்ற நிலைப்பாடு ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதிகள்.
ஒரு மொழியை தவிர்த்து அரசின் அறிவிப்பாணை வெளியிடுவதில் நோக்கமென்ன? - நீதிபதிகள்.
* என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் - சௌந்தர்யா தந்தை சாமிநாதன்.
வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன்.
வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார்.
என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு. தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு - சாமிநாதன் என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன்.
என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் - சாமிநாதன்
* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு:
நவ.22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல்.
வருகிற 15ம் தேதி காலை 11 மணி முதல் 23ம் தேதி மாலை 3.30 மணி வரை விண்ணப்பம் வினியோகம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 23ம்தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
23ம்தேதி வேட்புமனு பரிசீலனை, 24ம்தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்.
29ம்தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.
* சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்:
கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய தொடர் மருத்துவ கண்காணிப்பிற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் - மியாட் மருத்துவமனை
* மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவையடுத்து அவர் வகித்து வந்த உணவுத்துறையை பியூஸ் கோயல் கூடுதலாக கவனிப்பார்-குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு.
* 2020ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ' உலக உணவு திட்ட அமைப்புக்கு' அறிவிப்பு.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு.
இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, இந்த அமைப்பு.
ஆண்டுதோறும் 83 நாடுகளில் 91 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி வழங்குகிறது, இந்த அமைப்பு.
* தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் நாளை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாதத்தின் 2வது சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
* நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசும், அதிகாரிகளும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம்.
அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது - நீதிபதிகள்.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.
* கலை அறிவியல் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பிற்கு அக்.10 முதல் 20 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் பதிவு செய்வதில் சிரமம் இருந்தால் 044-22351014, 044-28276791 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் - உயர்கல்வித் துறை.
* சாதாரண மக்களுக்கு மணல் கிடைக்காத நிலையில் மணல் குவாரிகளை மூடி விடலாமே:
அரசு இணையத்தில் சாதாரண மனிதனுக்குஇலகுவாக மணல் கிடைக்கவில்லை”
“அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடிவிடலாமே?"- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கேள்வி.
ஆன்-லைனில் விற்பனை செய்யப்படும் மணல், இடைத்தரகர்களால் கூடுதல் விலைக்கே மக்களை சென்றடைகிறது - நீதிபதிகள்.
இடைதரகர் குறுக்கீடு இன்றி சாதாரண நபருக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்"
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு.
* கனிமவள கொள்ளையை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா.
கிரானைட் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
2014 க்கு பின் பதிவான 70 வழக்குகளில் பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது - அமலாக்கத் துறை விளக்கம்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 9 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்.
* மாநிலங்கள் இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு செப். 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
மாநிலங்கள் இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கு அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
* ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில், அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியும், ஆணையத்தால் ஆராய முடியாது - அப்பல்லோ நிர்வாகம்.
* உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 14-ஆவது நிதிக்குழு நிதியிலான அனைத்துப் பணிகளையும், ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களை வைத்து “இ-டெண்டர்” விடும் முறையை அரசு இத்தோடு நிறுத்த வேண்டும் - ஸ்டாலின்.
* ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல, நீதித்துறையில் ஊழல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் கடைசி புகலிடம் நீதித்துறை, இங்கு ஊழல் இருப்பதை சகிக்க முடியாது- நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்
No comments:
Post a Comment