அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2020)
முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 671 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,01,195 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 31 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,183 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,940 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,98,820 பேர் குணமடைந்துள்ளனர்.

*சென்னையில் 32 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி விதிப்பு தொகை: வரும் 5ந்தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்.

* பெங்களூருவில் இருந்து தக்காளி ஏற்றி வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி சாலையில் கொட்டியது.

தக்காளியை அள்ள பொதுமக்கள் கூடியதால் செங்கல்பட்டு-காஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

* ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைகோரி முறையீடு.

மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை - உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒப்புதல்.

* தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ஏர் கலப்பை பொருத்தி நடக்கும் பேரணியின் இறுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கிறார்-காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.

* ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும்.

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும். நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்.

* தமிழகத்தில் வரும் 18-ம் தேதிக்கு முன்பாக முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

ஓரிரு நாட்களில் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - சுகாதாரத் துறை.

* VPF கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவிப்பு.

டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும் - பாரதிராஜா.

* சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட செயலர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை.

100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை.

* நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தகவல்.

* தமிழக அரசு சார்பில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1380 மாணவர்கள் பதிவு.

மிகக் குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்கு பதிவு. ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என அதிகாரிகள் தகவல்.

* மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 4,5ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு -  மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் .

* ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

* நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் ?

மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரிய வழக்கில் உத்தரவு.

* ஜி.எஸ்.டி. இழப்பீடாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு:

ஜி.எஸ்.டி. இழப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய
நிதி ஒதுக்கீடு.

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு 2 வது தவணையாக நிதி ஒதுக்கீடு.

* புதுக்கோட்டையில் திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது - ஸ்டாலின்.

புதுக்கோட்டையில் தமிழகம் மீட்போம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

* வரும் 10,11ஆம் தேதிகளில் குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்.

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு.

* பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு;

அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி பணியாளர்களுக்கு போனஸ்.

நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ்.

8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும்.

“சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்"

நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு

2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு.

* ஆப்கானின் காபூல் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள், மாணவர்கள் மீது  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்.

ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் மீது கடந்த ஒரு மாதத்தில் நடக்கும் 2வது தாக்குதல் இதுவாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages