அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2020) முக்கிய செய்திகள்.

* சென்னையில் 38 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 94 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு.

படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் கடற்கரையில் மாசு என புகார்.

* புதுச்சேரியில் கனமழையால் சட்டப்பேரவை கட்டடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது.

கட்டடம் இடிந்ததில் சட்டப்பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 அரசு கார்கள் சேதமடைந்தன.

* மத்திய பிரேதசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த 4-ம் தேதி திறந்து கிடந்த ஆழ்துழை கிணற்றில் சிறுவன் தவறி வழுந்தான்.

கடந்த 3 நாட்களாக தேசிய மற்றும் மாநில் பேரிடர் மீட்புக் குழு சிறுவனை மீட்க தீவிரமாக போராடி வந்தது.

* பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு தொழிலாளர், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

* கடலூர்: விருத்தாசலம் சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி.

நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்துக்கு சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

* கப்பல் போக்குவரத்துத் துறையின் பெயர் மாற்றம் - பிரதமர் நரேந்திர மோடி.

இனி துறைமுகங்கள், கப்பல், நீர்வழி போக்குவரத்து துறை என மாற்றம் - பிரதமர் மோடி.

* ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 கூலி தொழிலாளர்கள் பலியாகினர்.

தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் சென்றனர்.

மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் பலியானதோடு, 11 பேர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* வேல்யாத்திரையின் 2ஆவது நாளிலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கைது.

சென்னை திருவொற்றியூர்  வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல்யாத்திரையை தொடரவிருந்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

* ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் உள்ளிட்ட 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டாரில் இந்திய ராணுவத்தினரும், பிஎஸ்எப் வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் ஊடுருருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிஎஸ்எப் கான்ஸ்டபிள் ஒருவர் வீரமரணமடைந்தார். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மீண்டும் சண்டை மூண்டது.

இதில் ராணுவ கேப்டன் மற்றும் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இருதரப்புக்கும் தொடர்ந்து சண்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages