அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,50,409 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 571 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,06,588 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,415 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,210 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,20,339 பேர் குணமடைந்துள்ளனர்.

* பீகார் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தித் தர உறுதியளித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ததையடுத்து பிரதமர் மோடி டிவிட்டரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பீகார் மக்கள் வளர்ச்சியை எதிர்நோக்கி பாஜக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மோடி, அனைத்துப் பகுதி மக்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு வர உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று, பாஜக கூட்டணிக்கு வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் 41 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

கொரோனா காரணமாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா 232 நாட்களுக்குப் பின் இன்று பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60வயதுக்கு மேலான முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

அதிக ரன்கள் அடித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி -  கேஎல் ராகுல் (14 போட்டிகளில் 670 ரன்கள்)

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி: ரபாடா (30 விக்கெட்டுகள்) 

வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)

ஃபேர் பிளே விருது -  மும்பை அணி

கேம் சேஞ்சர் விருது - கேஎல் ராகுல் (பஞ்சாப்) 

சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - பொல்லார்டு (மும்பை)

அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது - இஷான் கிஷண் - (மும்பை- 30 சிக்சர்)

பவர் பிளேயர் விருது - டிரெண்ட் போல்ட் (மும்பை)

மதிப்பு மிகுந்த வீரர் - ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)

* தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 2லட்சத்து 77ஆயிரத்து 300 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.  

மதுரை மற்றும் நாகை மாவட்டங்களில் டி.கல்லுப்பட்டி மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 77ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

சென்னை மாதவரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் 30ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலகத்தில் 21ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 49 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது.

* நவ.9ல் நாகை கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற காணாமல்போன 4 மீனவர்கள் கரை சேர்ந்தனர்.

படகுபழுதானதால் பலத்த காற்றால் திசைமாறி ராமநாதபுரம் பாசிப்பட்டினம் கடற்கரையில் படகுடன் கரை சேர்ந்தனர்.

* தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி நேரில் திறந்துவைத்து பார்வையிட்டார்.

ரூ.71.61 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மைய ஆய்வகத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

* பாஜக கூட்டணியை வெற்றி பெற வைத்த ஓவைசி - 5 இடங்களில் ஓவைசியின் கட்சி வெற்றி

இசுலாமியர் வாக்குகளை குறிவைத்து அமைக்கப்பட்ட ஓவைசியின் கூட்டணி இசுலாமிய வாக்குகளை கடுமையான முறையில் சிதற வைத்துள்ளது

இவரின் இந்த செயல் பாரதிய ஜனதா கட்சிக்கு பீகாரில் பெரும் வெற்றியை தனிப்பட்டமுறையில் தேடிக் கொடுத்துள்ளது

* பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன - திமுக தலைவர் ஸ்டாலின்

தலையீடுகளின்றி நியாயமான, சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் - ஸ்டாலின்.

* டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம்  - அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்:

நீதிபதிகளே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்.

அண்டை மாநிலங்களை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்.

பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை - தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்.

* மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வு நடத்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.

கொரோனா 2 ஆவது அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது - ஸ்டாலின்.

7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு உள்ளிட்ட மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையையும் 'ஆன்லைன் கவுன்சிலிங்' மூலமாக மட்டுமே நடத்த வேண்டும் - ஸ்டாலின்.

* வழக்கறிஞர் ஸ்டிக்கர் : ஏன் தடைவிதிக்க கூடாது?" -  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் கூட வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதால் அதனை ஏன் தடை செய்யக் கூடாது?  - மதுரை கிளை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கேள்வி.

* இனி மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள், செய்தி இணையதளங்கள்.

ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கடந்த மாதம் OTT தளங்களை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது.

அதை விசாரித்த நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்குமாறு அரசு மற்றும் இன்டர்நெட்-மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை வெளியிடும் ஓடிடி தளங்களை செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

* மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது,  அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் - ம‌ம்தா பானர்ஜி.

பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை:

பீகார் தேர்தலில் இத்தகைய வெற்றியை கொடுத்தது மக்களுக்கு நன்றி.

கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தி, உலகத்துக்கே இந்தியா தன்னுடைய சக்தியை காட்டியுள்ளது.

அமைதியாக தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு வீர‌ர்களுக்கு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யுங்கள். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு, தேர்தலில் வாக்குகள் சரிந்துள்ளது.

வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்லும் தீர்மானத்தை மக்கள் எடுத்துள்ளனர் - பிரதமர் மோடி.

ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு அறைகளுடன் 2 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

தற்போது தேசம் முழுவதும் விரிந்து ஒவ்வொருவரின் இதயத்தையும் பாஜக வென்று வருகிறது.

காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்கான கட்சி, ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை - பிரதமர் மோடி

* சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் கைது:

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு புகார் மீதான விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

* 20 லட்சத்திற்கும் மேலானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், எல்லோரும் நம்முடன் முன்னெடுப்பின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் தி.மு.கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்ததையடுத்து, இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை மீட்டெடுக்க எல்லோரும் நம்முடன் மூலமாக இதுவரை  20,00,000 புதிய உடன்பிறப்புகள் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

* தீபாவளி பரிசு வழங்குவது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம்: நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்புகளை வழங்க வேண்டாம்-தூத்துக்குடி நீதிபதி.

நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு வகைகளை வழங்க வேண்டாம் அது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பரிசு வழங்குவது தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்றாலும் கூட அவை சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் பரிசுகள் வழங்குவதை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

* அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்துகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை?

சென்னை யானைக்கவுனி அருகே தந்தை, மனைவி மற்றும் மகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages