மனிதனின் உடலும் உள்ளமும் நலம் பெற உடற் பயிற்சி, நடை பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா கட்டாயம் தேவை- பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மனிதனின் உடலும் உள்ளமும் நலம் பெற உடற் பயிற்சி, நடை பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா கட்டாயம் தேவை- பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

மனிதனின் உடலும் உள்ளமும் நலம் பெற உடற் பயிற்சி, நடை பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா கட்டாயம் தேவை- பாமக தலைவர் ஜி.கே.மணி

         
உடலும் மனமும் ஒருங்கிணைவதால் மனம் மகிழ்ச்சி  பெறும். உடலுக்கு புத்துணர்ச்சி கிட்டும்,வலிமையடையும். உடல் வெப்ப நிலை சீராகும். உடல் பருமன் குறையும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். சுறுசுறுப்பு மேலோங்கும். நோய் நொடிகள் வராது.

              
🎯உடற்பயிற்சியின் பலன்கள்
                    -------------------‐------
🍥தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
🍥மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவுகிறது.
🍥அத்துடன் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.
🍥இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம்
🍥வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

             
🎯நடைப்பயிற்சியின் பலன்கள்
                  ------------------------——
🍥தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்
🍥இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும்.
🍥ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
🍥நரம்புகளுக்கும், சதைகளுக்கு நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது.
🍥மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், குறைகிறது.
சுறு சுறுப்பு உண்டாகிறது.
🍥சுவாசப் பிரச்சனை, செரிமானப் பிரச்சனை சீராகிறது.
முகத்தில் பொலிவு, புத்துணர்ச்சி உண்டாகிறது.
🍥உடல் எடை குறையும்.
🍥எலும்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
🍥சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
🍥உடலின் உள்ளுறுப்புகள் பலம் பெறும்.
🍥தசைகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

              
🎯மூச்சுப் பயிற்சியின் பலன்கள்
                    --------------------———-
🍥உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை நமது உடலில் இருந்து கொண்டு இருக்கும்.
🍥முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
🍥நாம் சுவாசிக்கும் காற்று, குறைந்த அளவு  நுரையீரலை அடைகிறது.
🍥முறையான  பயிற்சி மேற்கொள்வதால்  நுரையீரல் முழுதும் பிராணவாயு  கிடைக்கும்.
🍥மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு  ஞாபக சக்தி அதிகமாகும்.
🍥படிக்கும் மாணவர்கள் இதனை செய்வதினால் படிப்பாற்றல், புத்தி கூர்மை  கூடும்.
🍥நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும்.

             
🎯யோகா பயிற்சியின் பலன்கள்
                   -----------------------------
🍥உடலின் இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
🍥தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது.
🍥சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
🍥தேவைற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது.
🍥இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது.
🍥நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages