அக்னிப்புரட்சி இன்றைய (12.11.2020) முக்கிய செய்திகள்: - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.11.2020) முக்கிய செய்திகள்:

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.11.2020) முக்கிய செய்திகள்:

* தமிழகத்தில் இன்று புதிதாக 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,52,521 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 565 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,07,173 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,440 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,347 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,22,686 பேர் குணமடைந்துள்ளனர்.

* சென்னையில் 42 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

* நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது.  ஒரு முட்டை விலை 30 காசுகள் ரூ.4.70க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு - தமிழக அரசு

சென்னை தி.நகர், மேற்கு மாம்பலம், கிண்டி, மீனம்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஆலந்தூர் , அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை:

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.

கடலூர், திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் என தகவல்.

* ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள்.

உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை .

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு.

* நவம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா காலத்தில் சுமார் 50 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ்க்கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். ஊபர், ஓலா செயலிகள் போல ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஜிபிஎஸ் டிராக்கிங் மூலம் பொதுமக்கள் காண முடியும்.

* தூத்துக்குடி: மேல அரசரடி ஊரணியில் மூழ்கி 12 வயதான இரட்டையர் சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஊரணியில் குளித்தபோது அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் ஆகிய இரட்டையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

* மோகன்லால் குழுமம் உள்ளிட்ட நகைக்கடைகளில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனை:

மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு.

கணக்கில் வராத ரூ.400 கோடி மதிப்பிலான 814 கிலோ தங்க நகைகளும் சோதனையின்போது கண்டுபிடிப்பு -வருமான வரித்துறை.

* அக்.1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் - நிதியமைச்சர்.

மார்ச் 1 - செப். 30 காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் - நிர்மலா சீதாராமன்.

* தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை.

வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை.

* சென்னையில் ஏரிகளை கண்காணிக்க மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தல்:

சென்னைக்கு நீர் ஆதாரமான ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை - ஏரிகள், நீர் நிலைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தல்.

* ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமனம்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமனம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages