அக்னிப்புரட்சி இன்றைய (14.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 1,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,56,372 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,08,179 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,466 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 2,494 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,27,752 பேர் குணமடைந்துள்ளனர்.

* மதுரை விளக்குத்தூண் அருகே ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்தை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் இருவர் பலி.

தீயை அணைக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இடிபாடுகளில் சிக்கிய 4 வீரர்களில் இருவர் பலி, இருவர் படுகாயம்.

* மதுரையில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன்,கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

தீ விபத்தில் காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்; மருத்துவ செலவை அரசே ஏற்கும் - முதல்வர் பழனிசாமி.

* தமிழகம் முழுவதும் களைகட்டும் தீபாவளி:

தமிழகம் முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாசார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம்.

புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

* ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை .

* தீபாவளி திருநாள் ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறினார் ரஜினிகாந்த்.

ஓரிரு நிமிடங்கள் ரசிகர்களை நோக்கி கையசைத்த ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்.

* ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி -ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு.

ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.

மக்களுடைய அன்பை, வாழ்த்தை நான் உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்.

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் எனக்கு மன நிறைவாக இருக்கிறது.

பனிமலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி -பிரதமர் மோடி.

* சென்னை யானைக்கவுனியில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்:

கைதான கைலாஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் தங்கி, கைலாஷ் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.

கள்ளச் சந்தையில் சில துப்பாக்கிகளை வாங்கி வந்து சத்தம் குறைவாக கேட்கும் துப்பாக்கியை வைத்து பயிற்சி செய்ததாக கைலாஷ் தகவல்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முன்னாள் ராணுவ அதிகாரியின் கார் என தெரிய வந்துள்ளது.

சென்னையில் கைலாஷ்க்கு யார் யாருடன் தொடர்பு என போலீசார் விசாரணை.

* மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார்.

தீவிபத்தில் உயிரிழந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

* நான்கு வீரர்களுடன் இன்று விண்ணில் பாயவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன கேப்சூல், மோசமான வானிலை காரணமாக 24 மணி நேரம் தாமதமாக செலுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages