நவம்பர் 14-தேசிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
குழந்தைகள் தினம் கொண்டடும் இந்நாளில் குழந்தைச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பச்சரிசி மாவில் கோவில் சிலையாக, யானையாக, பூனையாக, குதிரையாக எண்ணிய மாதிரி கைவண்ணத்தால் உருவாக்க முடியும். அதுபோல் பெற்றோர்கள் குழந்தைகளின் நலனில்,வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி விருப்பத்திற்கேற்ப உருவாக்க முடியும். இன்றைய குழந்தைகள் வீட்டிற்கும் நாட்டிற்கும் தூண்கள். அவர்கள்தான் நாளை நாட்டை நிர்மாணிக்கும் சிற்பிகள்.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை - (குறள்)
கல்வியே ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் ஆகும். மற்ற செல்வங்கள் எல்லாம் சிறப்பானவை ஆகாது. ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழு ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
நாட்டின் தலையெழுத்து வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று போற்றுவதற்கிணங்க நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான்.குழந்தைச் செல்வங்களான மாணவ-மாணவியர் அனைவரும் தரமான கல்விகற்று, நல்ல ஒழுக்கம், பண்பாடு, நாட்டுப்பற்று,சேவை நோக்கம், தன்னம்பிக்கை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றை நிலை நிறுத்தி பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று எல்லா நிலைகளிலும் உயரவேண்டுமென நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய அதிநவீன வளர்ச்சிக் இணையாக தன்னை சுற்றி சுற்றி வரும் தீய சக்தியிலிருந்து விலகிட வேண்டும்.
மாணவச் செல்வங்களை உருவாக்கும் சிறிபிகளாக திகழும் பெற்றோர்களுக் கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பாராட்டுதழையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவம்பர் 14-தேசிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment