அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1714 பேர் பாதிப்பு(மொத்த பாதிப்பு 7,63,282)
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 479 பேர் பாதிப்பு(2,10,135)
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 2311(மொத்தம் 7,37,281)
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 (மொத்தம் 11,531)
இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,014 (இதுவரை 1,12,66,091 பேர் பரிசோதனை)
* சென்னையில் 48 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது:
சபரிமலையில் மண்டல காலம் கோவிட் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கும், மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து இரவு, 10:00 மணிக்கும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் இரவு, 7:00 மணிக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது.
இரவு நேரத்தில் நீண்ட நேரம் நடை திறந்திருக்க வேண்டாம் என்று தந்திரியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி மாலை, 5:00 மணிக்கு பதிலாக, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 9:00 மணிக்கு பதில், 8:00 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து, 9:00 மணிக்கு அரிவராசனம் பாடி, 9:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
* விண்வெளியில் சுற்றி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கப்பலில் இருந்து ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.
பசிபிக் கடலில் உள்ள மார்ஷல் தீவுகளில் நிறுத்தப்பட்டிருந்த யுஎஸ்எஸ் ஜான் ஃபின் என்ற போர்க்கப்பலில் இருந்து எஸ்எம் 3 பிளாக் II என்ற ஏவுகணை ஏவப்பட்டது.
விண்வெளியைத் தாண்டி சென்ற இந்த ஏவுகணை அங்கு சுற்றி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
விண்வெளியில் உள்ள ஏவுகணை தாக்கி அழிக்கப்பட்டது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.
* சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பைடனுக்கு பிரதமர் வாழ்த்து. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் நன்றி தெரிவித்தார்.
* சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை விட அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
* எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
முதற்கட்டமாக 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்று கலந்தாய்வில் 150 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
* நடிகை குஷ்பு பயணித்த கார் மதுராந்தகம் அருகே விபத்து:
செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
* அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது"-சென்னை உயர் நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம்.
அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு நவம்பர் 20க்கு தள்ளிவைப்பு.
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது முடிவுகள் வெளியிடப்படுவதாக ராம்குமார் ஆதித்தன் வழக்கு.
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
* பள்ளி பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு செய்யப்படும்.
10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
* நவ.22ஆம் தேதி கோவை கருமத்தம்பட்டியில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும்- கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
* பிற மாநில மாணவர்களின் பெயர்கள் மருத்துவ தரவரிசை பட்டியலில் இடம்பெற்றது எப்படி? -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உடனே மாற்றி வெளியிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
* மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவிட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும்-சென்னை உயர்நீதிமன்றம்.
மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவிட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையை திறப்பது பற்றி டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசுக்குபரிந்துரை செய்யப்படும் என சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும் என கூறியுள்ளது.
* கடலூரில் வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன், குஷ்பு உள்ளிட்டோர் கைது.
கடலூரில் வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன், ராகவன், அண்ணாமலை, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக 1000-க்கும் அதிகமான பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* வடகிழக்கு பருவமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகள் தவறான தகவல்கள் பரப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் உதயக்குமார் எச்சரிக்கை.
* லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை:
டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது- லட்சுமி விலாஸ் வங்கி.லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி டி.என் மனோகரன் தகவல்.
2020ம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் -டி.என் மனோகரன்.
* நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்"
மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி.
ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தவிப்பு.
வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்.
வரும் 20 ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு எனத் தகவல்.
கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை.
* நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28 க்குள் வசூலித்து கொள்ளலாம்"-தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.
ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து.
கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்.
* சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: முதல்வர் பழனிச்சாமி.
* அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு.
மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர்.
கடந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.
* தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமயைாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் உடனான முத்தரப்பு பேச்சில் உடன்பாடு.
நவம்பர் வரை வி.வி.எப் கட்டணமின்றி திரைப்படங்கள் வெளியிடலாம் என்றிருந்த நிலையில் பேச்சுவார்த்தை.
மார்ச் மாதத்துக்கு பின் எந்த கட்டண அடிப்படையில் படம் வெளியிடுவது என்பது பற்றி அடுத்த கட்ட பேச்சில் முடிவு.
No comments:
Post a Comment