அக்னிப்புரட்சி இன்றைய (19.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,64,989 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 471 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,10,601 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,550 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,251 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,39,532 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் 49 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.
* போலியான பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.
முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது மத்திய அரசு சாட்டையை சுழற்றியுள்ளது.
ஆயிரத்து 276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது.
இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
* பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவ.30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு.
* தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளையும், திருக்கல்யாணம் நாளை மறுநாளும் நடக்கிறது.
* முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை.
* சிம்புவின் "ஈஸ்வரன்" படக்குழுவிற்கு நோட்டீஸ்:
“ஈஸ்வரன் பட போஸ்டர், டிரெய்லரை உடனடியாக நிறுத்த வேண்டும்" -இந்திய விலங்கு நல வாரியம் நோட்டீஸ்.
படத்தில் காண்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் பாம்பிற்கு தடையில்லா சான்று பெறவில்லை என குற்றச்சாட்டு.
படப்பிடிப்பின் போது உண்மையான பாம்பை சிம்பு பிடித்ததாக வீடியோ பரவியது.
படத்தில் பயன்படுத்தப்பட்டது கிராபிக்ஸ் பாம்பு என படக்குழுவினர் விளக்கம்.
* அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.
* முடிவுற்ற பணிகள் திறந்து வைப்பு - புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்;
சேலம் அருகே வனவாசியில் அரசு விழா- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.
ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்.
ரூ.123.53 கோடியில் 86 முடிவுற்ற பணிகள்- ரூ.118.93 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
* ஆலங்குளம் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை ஷீபா மருத்துவமனையில் பூங்கோதை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவரான பூங்கோதை ஆலடி அருணா எதற்காக அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டார் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.
* ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தற்போது ஆழ்கடல் பகுதியிலும் அனுமதி கொடுத்துள்ளது குறித்து முதலமைச்சரோ அமைச்சர்களோ எதுவும் கூறாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.
மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் இந்த திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவை சேர்ந்த அமைச்சர்களோ தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
* இரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு:
நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது செல்பி எடுத்த மாணவன் உயிரிழந்தார்.
உயர் அழுத்த மின்கம்பம் உரசி பத்தாம் வகுப்பு மாணவர் ஞாணேஸ்வரன் உயிரிழந்தார்.
* டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.
* திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்.
* சென்னை சவுகார்பேட்டை துப்பாக்கிச் சூடு வழக்கில் மேலும் 3 பேர் கைது:
சென்னையில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது. கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்ளிட்ட மூன்று பேர் டெல்லி அருகே சிக்கினர்.
சவுகார்பேட்டையில் தொழில் அதிபர் தலீல்சந்த், அவரது மனைவி மற்றும் மகன் ஷீத்தல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை வழக்கில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்டோர் டெல்லி அருகே ஆக்ராவில் கைது.
* பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி ராஜினாமா:
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மேவலால் சவுத்ரி அமைச்சராக்கப் பட்டதற்கு எதிர்ப்பு.
ராஜினாமா செய்த மேவலால் சவுத்ரி ஜேடியூ கட்சியைச் சேர்ந்தவர்.
* தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடி மாற்றம்.
கட்டண நிர்ணய குழு பரிந்துரைத்த கட்டணங்களுக்கும், அரசு வெளியிட்டுள்ள கட்டணங்களுக்கும் முரண்பாடு.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் ரூ. 3.85 லட்சம் முதல், ரூ. 4 லட்சம் வரை நிர்ணயித்தது கட்டண நிர்ணயக் குழு.
ஆனால் தமிழக அரசு ஒரு கல்லூரிக்கான கட்டணத்தை அதிகபட்சமாக ரூ. 4.15 லட்சமாக
நிர்ணயித்துள்ளது.
சில கல்லூரிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியும், குறைத்தும் அறிவிப்பு.
* குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.
குழந்தைகள் கடத்தல் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி.
சிறார் நீதி சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் ஒருவர் கூட பதவியில் இல்லாதது ஏன்?
டிராபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை?
உள்துறை, சமூக நலத்துறை செயலாளர், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோர் ஜன. 25 ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தருமபுரி மாவட்டம் ஏலகுண்டூர் அருகே பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது.
50 அடி ஆழ, தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
* தருமபுரி: பஞ்சப்பள்ளி அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு:
பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு .
மயக்கஊசி செலுத்தி கிரேன் உதவியுடன் வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் யானையை மீட்டனர்.
No comments:
Post a Comment