அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2020) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு:
சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.84.31 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17 ஆகவும் விற்பனையாகிறது.

* உத்தரப்பிரதேசத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு.

லக்னோ-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஆறு குழந்தைகள் உள்பட 14 பேர் பலி.

* இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.

ஒபிஎஸ் இபிஎஸ் தலைமையில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை.

* தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது:

தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொரோனா காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படு கின்றனர்.

தீபத் திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 29ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்.

29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

* இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

பக்தர்கள் மலையேறுவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

உள்ளூர் பொதுமக்கள் அடையாள அட்டையை காட்டி நகருக்குள் சென்று வரலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 90 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்த மோசமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடந்த 22 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேசமயம், இந்தியாவில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட எடுத்துக் கொள்ளப்பட, மிக அதிகமான நாட்களில் இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதை காட்டுகிறது.

* 2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்.

பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கலாம்.

கொரோனா மருந்து இரண்டு டோஸ் அதிகபட்சம் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தகவல்.

* தினமலர் நாளேடு குறித்தும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பற்றியும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம்

* தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. நவெம்பர் 25/26 தேதிகளில் சென்னை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

* "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற அடிப்படையில் திமுக சார்பில் பிரச்சார பயணம் - திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி.

திமுக சார்பில் அடுத்த 75 நாட்களுக்கு 15 மூத்த தலைவர்கள் பிரச்சார பயணம் மேற்கொள்வர் - கே.என்.நேரு.

திமுக 1500 பிரச்சார கூட்டங்களை மேற்கொள்ள திட்டம் - கே.என்.நேரு

15000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் நடைபெறும். வரும் 29-ஆம் தேதி சேலத்தில் கனிமொழி சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார்.

வரும் ஜனவரியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு 2 வது முறையாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

* மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு அய்யா

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேர்வான அரசுப் பள்ளி மாணவருக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என இராமதாசு அய்யா வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைத்தும் பல மாணவர்களால் கல்லூரிகளில் சேர முடியவில்லை.

7.5% இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்கள் அதிக கட்டணம் செலுத்த முடியவில்லை.

கைக்கு எட்டிய மருத்துவக்கல்வி வாய்க்கு எட்டதோ என்ற ஏக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

* அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்ஸில் ஏராளமானோர் நுழைந்ததால் இடையூறு. வழக்கு விசாரணை நிறுத்தம்.

காணொலியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

டிவி மற்றும் வீட்டில் பேச்சு சத்தங்களால் தங்களால் விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் அதிருப்தி.

* நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

2019 ல் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் அனுமதியின்றி புகைப்படங்களை வெளியிட்டதாக அமலாபால் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

* லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - முதலமைச்சர் பழனிசாமி.

ராணுவ வீரர் நாயக் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நுரையீரல் தொற்று அதிகரிப்பு:

டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் சென்னை அல்லது கோவாவுக்கு அழைத்து செல்ல  மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

ஆஸ்துமா பிரச்சினை காரணமாக சோனியா காந்தி தற்போது டெல்லியில் தனது வீட்டில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

சோனியா காந்தி உடன் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி செல்ல உள்ளதாக தகவல்.

* வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது:

தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்.

அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்.

23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை,  கனமழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.

24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கோவாக்ஸின் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனையில், முதல் தன்னார்வலராக சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும் ஏழை மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கைவிடும் நிலை வருத்தமளிக்கிறது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து.

மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் ஏழை மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும்.

அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு.

* தனது உடல்நிலை குறித்து உண்மையை திரிக்க வேண்டாம் -திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா அறிக்கை:

என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages