அக்னிப்புரட்சி இன்றைய (21.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,68,340 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 486 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,11,555 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 18 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,586 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,133 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,43,838 பேர் குணமடைந்துள்ளனர்.
* பேரறிவாளன் விடுதலை விவகாரம் அவருக்கும், ஆளுநருக்கும் இடையேயானது- சிபிஐ.
பேரறிவாளன் விடுதலையில் முடிவு எடுக்க வேண்டியவர் ஆளுநர் மட்டுமே
-உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல் .
* சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.84.46 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.76.37 ஆகவும் விற்பனையாகிறது.
* அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2011 ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஜவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டாலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஜவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
* சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
44 மாற்றுத்திறனாளிகள், 15 விளையாட்டு பிரிவு மாணவர்கள் உள்பட 70 பேர் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
* ஜம்மு காஷ்மீர் நௌஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு.
பாகிஸ்தான் தூதராக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
* திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை பாஜகவில் இணைந்தார்.
* அரியர் ஆல் பாஸ் - தமிழக அரசு விளக்கம்:
அரியர் தேர்வில் ஆல் பாஸ் எனும் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.
பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரியர் தேர்வு ரத்து.
செய்யப்பட்டு ஆல் பாஸ் முடிவு எடுக்கப்பட்டது - தமிழக அரசு.
பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளை மீறி அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - தமிழக அரசு.
அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது - தமிழக அரசு.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை பதில் மனு தாக்கல்.
விதிகளை மீறி அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு கூறிய நிலையில் தமிழக அரசு விளக்கம்.
*;நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது.
* மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்"-திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.
"இந்தக் கல்வியாண்டில், கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை திமுக முழுமையாக ஏற்கும்"
* நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது:
படகில் ஏறி பிரசாரம் மேற்கொண்டு திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கைது.
* தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவானது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார்:
சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.
பாஜக தொண்டர்களை பார்த்ததும் காரைவிட்டு இறங்கினார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
* அமித்ஷாவை நோக்கி பதாகை வீசிய நபர் கைது:
விமான நிலையம் அருகே நடந்து சென்ற அமித்ஷாவை நோக்கி ஒருவர் பதாகையை வீசினார். பதாகை வீசிய நபர் மன நலம் குன்றியவர் என தகவல்.
* தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும்.
“மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்"
கல்வி உதவித்தொகைக்கு அனுமதி வரும்வரை காத்திருக்காமல் உடனடியாக செலுத்த சுழல் நிதியை உருவாக்கவும் உத்தரவு.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார்:
₹ 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையத்தை விரிவாக்கும் திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்டபால திட்டத்திற்கு அடிக்கல்.
கரூர் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை துவங்கி வைத்தார். ஐஓசி.,யின் 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
* இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும். 3 வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் - அரசு விழாவில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு..
* தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு-முதல்வர் பழனிச்சாமி.
நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது.
மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.
புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்ததும் கடைமடை பகுதிகளுக்கும் சென்று சேர்ந்துள்ளது.
பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment