சென்னையில் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை: - Agnipuratchi

சென்னையில் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை:

Share This

சென்னையில் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை:

தொன்மையான தமிழ் மொழியில் என்னால் உரையாற்ற முடியவில்லை- எனக்கு தமிழ் தெரியாது- வருத்தம் தருகிறது.

தமிழில் பேச முடியாததற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

தமிழர் பண்பாடு, கலாசாரம் மிகவும் தொன்மையானது- அமித்ஷா.

தமிழகத்தின் கலை அறிவியல், சுதந்திரத்துக்கான பங்களிப்புக்கு தலைவணங்குகிறேன்.

ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி அரசும் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என நம்பிக்கை இருக்கிறது

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான பெரும் போர் நடைபெற்று வருகிறது- அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையின் கீழ் கொரோனாவை எதிர்ப்பதில் நாம்ம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இந்திய அரசு, மாநில அரசுகளுடன் 130 கோடி மக்களும் மோடி தலைமையில் கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு பாராட்டுகள்.

கொரோனாவால் குணமடைந்தோர் விகிதம் தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கிறது- அமித்ஷா.

கொரோனாவை தடுப்பதில், புள்ளி விவரங்கள் தருவதில் தமிழகம் அறிவியல்பூர்வமாக செயல்படுகிறது.

கர்ப்பிணிகள், சிசுக்களின் பராமரிப்பு இந்தியாவில் தமிழ்நாட்டைப் போல எங்கும் வழங்கப்படவில்லை.

மாநிலங்களுக்கு இடையே நல்லாட்சி போட்டியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

நீர் பாதுகாப்பு, நீர் விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும் மோடி அரசின் 3 சீர்திருத்தங்களுக்கு தமிழக அரசு முழு ஆதரவு
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது.

தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,400 கோடி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு அநீதி இழைத்துவிட்டதாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.

10 ஆண்டுகளாக மத்தியில் அங்கம் வகித்த திமுக நீங்கள் செய்ததை பட்டியலிட முடியுமா?

தமிழகத்துக்கு நாங்கள் என்ன செய்தோம் என பட்டியலிட தயார்- அமித்ஷா.

2013-14 பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ16,155கோடி ஒதுக்கீடு செய்தது மன்மோகன்சிங் அரசு.

கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ32,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

கொரோனா காலத்தில் ரூ4,500 கோடி நேரடி பணவர்த்தனை மூலம் தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

108 கோடி கிலோ உணவு தானியங்கள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

3.66 கோடி பருப்பு வகைகள் தமிழகத்துக்கு தரப்பட்டுள்ளது.

ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ1,000 கோடி நேரடி பணவர்த்தனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் மோடி அரசு உறுதுணையாக இருக்கும்- அமித்ஷா.

நீண்டகாலத்துக்குப் பின் சென்னை வந்திருப்பதால் அரசியல் பேச விரும்புகிறேன்.

ஊழல், குடும்ப அரசியல், ஜாதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் பிரதமர் மோடி.

குடும்ப அரசியல் நடத்தி வரும் தமிழக, தேசிய, மாநில கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படுகிறது.

குடும்ப அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கு தமிழகத்திலும் தக்க பாடம் புகட்டப்படும்.

ஊழலுக்கு எதிராக பேச காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு என்ன அருகதை இருக்கிறது- அமித்ஷா.

2ஜி மட்டுமல்லாது பல ஊழல்களை செய்தவர்கள் ஊழல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைக்கும் போது உங்கள் குடும்பத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages