அக்னிப்புரட்சி இன்றைய (24.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.11.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் இன்று புதிதாக 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,73,176 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 469 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,12,970 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 17 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,639 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 1,910 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,49,662 பேர் குணமடைந்துள்ளனர்.

* அசென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.84.64 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ரூ.76.88 ஆகவும் விற்பனையாகிறது.

* சென்னை அசோக்நகரில் கனமழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

40 அடி உயர மரத்தை உடனே மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் வறியுறுத்தல்

நிவர் புயல் காரணமாக தாழங்குடா, தேவணாம்பட்டினம், சிங்காரதோப்பு, ராசாப்பேட்டை, அக்கரைக்கோரி, கடலூர் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது

* செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது நீர்மட்டம் 21.22 அடியாக உள்ளது

* நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி,காரைக்காலில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் புயல் காரணமாக விடுமுறை

* போலீசார் முன்னிலையில் தீக்குளித்து பெண் தற்கொலை:

நெல்லை சுத்தமல்லியில் பரபரப்பு சம்பவம்/காரணம் இன்றி 2 மகன்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு.

* 36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது -ஆர்.பி.உதயகுமார்.

நிவர் புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம்.

புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

* நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் நாளை கடைகளை திறக்க வேண்டாம் எனவும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தல்.

* சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ஒரு சவரன் ரூ.37,152-க்கு விற்பனை.

* நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

இன்று இரவு 9மணி முதல் 26ஆம் தேதி காலை 6மணி வரை 144 தடை உத்தரவு அமல் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவு

இன்றும் நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு

* பிரதமர் நரேந்திர மோடி, நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். மத்திய அரசு சார்பில் தேவையான ஒத்துழைப்பும், உதவியும் வழங்கப்படும் என்று மோடி அறிவிப்பு

* சென்னை தாம்பரம் அருகே வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்ற கவுசல்யா என்பவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்

* 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் உயிரிழந்த தலில்சந்தின் உறவினர் திடீர் தற்கொலை.

சென்னை ஆர்.கே.நகரில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

ஜெயமாலா பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சி.
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை.

* அதிமுக முன்னாள் எம்.பி.யும், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகனுமான ராஜேந்திரகுமார், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

* நிவர் புயல் முன்னெச்சரிக்கை - அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுரை.

பேரிடர் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் மதியமே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தல்.

* நிவர் புயல் காரணமாக 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்:

செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்.

கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும்.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

* நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 4 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது,

அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

காரைக்கால்- மாமல்லபுரம் அதனை ஒட்டிய புதுச்சேரி பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு.

* நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் நிலைமையை தீவிரமாக கண்காணிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

நிவர் புயல்: சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது!
நிவர் புயல்: மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சென்னை மெரினா கடற்கரை, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது

* கடலோர காவல் படை தயார்..!!
சென்னையில் 5 வெள்ள நிவாரண மீட்பு குழுக்கள், ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் மீட்பு பணிக்காக ஐஎன்எஸ் ஜோதி கப்பலும் தயார் நிலையில் உள்ளது

6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது நிவர் புயல்,மாலை 5 மணிக்கு பிறகு நிவர் புயல் மேற்கு,வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல்

* நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் ; மணிக்கு 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

* நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

இரு மார்கங்களிலும் நாளை 1 நாள் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் இரவுக்குள் பாதுகாப்பு முகாமிற்கு செல்ல நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவுறுத்தல்!

* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை : அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் - முதல்வர் பழனிசாமி

காசிமேட்டில் உள்ள துறைமுகத்தில் லைட் ஹவுஸ் பகுதிகளில் கடல் அலைகள் தடுப்பு சுவர்களை தாண்டி வருவதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

* சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து..!

* 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு:

உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் தடை.

கஜா புயலைவிட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும் - பாலச்சந்திரன், வானிலை மைய இயக்குனர்!

சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

எழும்பூர், வேப்பேரி, பூவிருந்தவல்லி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்

விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல்

* சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

* அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் தீவிர புயலாக மாறி அதிதீவிர புயலாக வலுப்பெறும்  - வானிலை ஆய்வு மையம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages