அக்னிப்புரட்சி இன்றைய (25.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.11.2020) முக்கிய செய்திகள்.

* விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என கணிப்பு! இரவு 11 மணியளவில் புயலின் கண் பகுதி கரையை தொடும் எனத் தகவல்!

ஆன்மீகத்தில் சிவராத்திரி அன்று மக்கள் விழிப்புடன் இருப்பதை போல இன்று இரவு மக்கள் விழிப்புடனும் கவனத்துடனும் செயல்படவேண்டும்
-  அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்

* சென்னை மக்கள் கவனத்திற்கு
நிவர் புயல் காரணமாக வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரில் பாம்பு போன்ற ஊர்வன உயிரிகள் ஏதேனும் வந்தால் சென்னை கிண்டி வனத்துறையை தொடர்பு கொள்ளலாம்

கிண்டி வனச்சரக அதிகாரி
கிளமென்ட் எடிசன் (Clement Edison)  9566184292
வனச்சரக எண் 044 22200335

* கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்

* இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவிப்பு. வரும் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

* நிவர் புயல் - மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய ராணுவம்.

12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருகிறோம் - ராணுவம்.

* செம்பரம்பாக்கம் திறப்பு; கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் - சென்னை மாநகராட்சி

கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540.

* சென்னை நகரில் தற்போது முதல் புயல் கரையை கடக்கும் வரை அதி கனமழை பெய்யும்!

அதி கனமழை தொடர்ச்சியாக பல மணி நேரம் பெய்யவும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்!

* டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை இவற்றைக் கருத்தில் கொண்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை ஒரு வார காலம் நீட்டிக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டுமாய் உழவர்கள் கோரிக்கை

* செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பையடுத்து முதலமைச்சர் ஆய்வு.

செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதற்கட்டமாக 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கத்தை தொடர்ந்து புயல் நிவாரண முகாம்களையும் பார்வையிடுகிறார் முதலமைச்சர்.

சென்னை மழை பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து - தெற்கு ரயில்வே.

டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி தரப்படும் - தெற்கு ரயில்வே.

கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் - கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்பு.

புயல் பாதுகாப்பு மையம் மற்றும் நிவாரண மையங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர சாகமூரி உத்தரவு.

* நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் மற்றும் சென்னைக்கு வந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

💥லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கி கையகப்படுத்த நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

இன்று நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

புயல் கரையை கடந்த பிறகு, தமிழக உள்மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

* கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்பு: புயல் பாதுகாப்பு மையம் மற்றும் நிவாரண மையங்களுக்கு செல்ல கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு.

காற்று வீசும்நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்

மெழுகுவர்த்தி, டார்ச்லைட்டுகள், உணவுப் பொருட்களை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் - ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி

* நிவர் புயல் கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம்

* சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே மரம் சாய்ந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழப்பு

புயல் கரையை கடந்த பிறகு, தமிழக உள்மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

* 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும் புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும்

* நிவர் புயல் காரணமாக நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
விழுப்புரம்
கடலூர்
திருவண்ணாமலை
அரியலூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்
நாகை (மயிலாடுதுறை சேர்த்து)
திருவாரூர்
வேலூர்
கள்ளக்குறிச்சி
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்! முக்கிய சாலைகள் மூடப்பட்டது! - சென்னை பெருநகர காவல்துறை!

தற்போது! சென்னையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சற்று முன் 50 கி.மீ வேகத்தில் வீசிய காற்று தற்போது எதிர் கொள்ள முடியாத அளவிற்கு வீசத் தொடங்கியுள்ளது.

* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
3000 கன அடி நீர் வெளியேற்றம்!

* நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது நிவர் புயல்.

பலத்த மழை, சூறாவளி காற்று வீசும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்.

கடலூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலை கொண்டிருக்கிறது - வானிலை ஆய்வு மையம்.

* நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் - சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள்.

சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

* சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடல்.

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில்
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மூடப்பட்டது.

கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 நாள்
மூடப்பட்டிருந்தது சென்னை விமான நிலையம்.

💥புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில் நாளை NI act கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு பொது விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

* ECR வழியாக புதுச்சேரி செல்ல தடை விதிப்பு

* கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணை பேராசிரியர்களுக்கான CSIR-UGC NET : தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒத்திவைப்பு

இந்த தேர்வுகள் நாளை நடைபெறுவதாக இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

* உடல் நலக்குறைவு காரணமாக இந்த பேரிடர் காலத்தில் நேரில் வந்து சந்தித்து தங்களுக்கு   சேவை அளிக்க இயலவில்லை.. : வருத்தம் தெரிவித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் இராமலிங்கம் தொகுதி மக்களுக்கு கடிதம்

* தமிழகத்தில் இன்று புதிதாக 1,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,74,710 உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று 467 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,13,417 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று 16 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 11,655 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று 1,873 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,51,535 பேர் குணமடைந்துள்ளனர்.

* நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல்

💥செம்பரம்பாக்கத்தில் 7,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

நாளை மாலை 4 மணி வரை கனமழை நீடிக்கும் என்பதால் நடவடிக்கை

60,000 கன அடி நீர் வரையில் வெள்ளப் பெருக்கு இன்றி நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது அடையாறு. எனவே இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவிப்பு

💥தென் மேற்கு வங்கக் கடலில் அடுத்த வாரம் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை ஆய்வு நடுவம் அறிவிப்பு. டிசம்பர் முதல் வாரத்தில் அந்தமான் தீவுகள் அருகே மூன்றாவதாக ஒரு புயல் உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக கணிப்பு

* அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் மாரடோனா (60) மரணம்.

* கரையை கடக்கத்தொடங்கியது நிவர் புயல்

புதுவைக்கு வடக்கே 30கி.மீ தொலைவில் அதி தீவிர புயலாக நிவர்புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது -IMD

நிவர் புயல் காரணமாக அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கனமழை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages