அக்னிப்புரட்சி இன்றைய 28.11.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய 28.11.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய 28.11.2020) முக்கிய செய்திகள்.

* திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலின் 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

* சென்னையில் பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து 85.12 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து 77.56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் அவர் இன்று கலந்தாலோசிக்க உள்ளார்.

காலையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இதுகுறித்து விவாதிக்கும் முதலமைச்சர், பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

* செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது!

மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்திறப்பு இல்லை!

* நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவு.

* தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு, மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதிலளிப்பதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு, மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதிலளிப்பதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

* வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகிறது: நாகப்பட்டினம் அருகே டிசம்பர் 2ல் கரையை கடக்கிறது

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை. இன்று காலை 8.30 மணியளவில் உருவானது என தகவல்.

அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்;
அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு.

புயலாக மாறினால்   ' புரெவி ' என பெயர் வைக்கப்படும். - வானிலை ஆய்வு மையம்.

* நிவர் புயல் -  24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் தங்கி பணியாற்றிய அமைச்சர், அதிகாரிகள்.

நிவர் புயல் -  உள்துறை அமைச்சர் தேவையான குழுக்களை அனுப்பி வைத்தார்.

* நிவர் புயல் -  பிரதமர் கேட்டறிந்தார்.
நிவர் புயல் -  வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழைப்பொழிவு.

நிவர் புயல் -  ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நிவர் புயல் -  வெள்ள பாதிப்பு - சிறப்பான நடவடிக்கை எடுத்த ஆட்சியர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் - முதல்வர் பழனிச்சாமி.

* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது.

அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் - விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி.

அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் - ஒட்டுமொத்த முயற்சி.

* கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு:

ஜைடஸ் காடிலா பூங்காவில்  டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி தயாரிப்பு.

அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி  பாராட்டு.

தடுப்பூசி தயாரிப்பு முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி.

* நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய நவ.30 ல் தமிழகம் மற்றும் புதுவை வருகிறது மத்தியக் குழு.

* அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் ‘பிஐஎஸ்’ தரச்சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

* தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு:

தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்.

வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக ஷன்சொங்கம் ஜடாக் சிரு நியமனம்.

* விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* தமிழகத்தில் இன்று 1430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று 1450 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

* ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்த நிலையில்,வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

* ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், 30ந் தேதி ஆலோசனை:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30ந் தேதி காலை ரஜினிகாந்த் ஆலோசனை.

அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்.

கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு என ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், 30ந் தேதி ஆலோசனை.

கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியானது.

தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages