அக்னிப்புரட்சி இன்றைய (30.11.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் 85.31 ரூபாயாகவும், டீசல் லிட்டர் 77.84 ரூபாயாகவும் உள்ளன.
*:2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் இணையும் சந்திரகிரணம் மதியம் 1:04 மணிக்குத் தொடங்கி மாலை 5:22 மணிக்கு முடிவடைகிறது.
இந்த சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என்றும் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
* மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 5வது நாளாக டெல்லியில் போராட்டம்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லி எல்லையில் பல ஆயிரம் விவசாயிகள் இரவு முழுவதும் முகாம்.
* நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது:
மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகத்தில் ஆய்வுகளை தொடங்கவுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிவர் புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட உள்ளது.
* தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று பிற்பகல் 4 மணிக்கு ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை.
சட்டமன்ற தேர்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து காங்கிரசாரின் கருத்தை கேட்கிறார் ராகுல் காந்தி.
* அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது- ரஜினி.
நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.
அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுப்பேன்.
சில மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது - ரஜினி
என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் - ரஜினி
பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலர் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை - ரஜினி
தற்போது மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாக அழைத்து பேசி வருவதாக தகவல்.
* அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார் நடிகர் ரஜினிகாந்த்!” - மக்கள் மன்ற நிர்வாகிகள்
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது.
ரஜினிகாந்தின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் - மக்கள் மன்ற நிர்வாகிகள் கருத்து
* நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
* சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் தேங்கியுள்ள சதுப்பு நில பகுதிகளை முதல்வர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு வருகிறார்.
நிவர் புயல் பாதிப்பு, மழை சேதம் உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்து வருகிறார் முதல்வர்
ஓ.எம்.ஆர். சாலையில் காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மேடு நீர்வழித்தடத்தையும் பார்வையிட உள்ளார் முதல்வர்.
* அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் ? அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது,?
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் & அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும்.
முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
மக்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
* வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து, துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், பாம்பன், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, தூத்துக்குடி, குளச்சல், ராமேஸ்வரம் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.
கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க உத்தரவு.
* புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உத்தரவு.
* தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிச. 7 ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி.
உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை கர்ணன் விமர்சித்த விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி.
* அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் முகாந்திரம் உள்ளதா என பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்?-உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்த போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - நீதிபதிகள்.
* போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது"
பொறியியல் கல்லூரிகளை போல மருத்துவக் கல்லூரிகளும் அதிகரித்துவிடும்- நீதிபதிகள்.
"காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதியளிக்க வேண்டாம்"
அடுத்த ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்- அரசு தரப்பு தகவல்.
* பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை.
தலைமை செயலகத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு.
தென் மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
* மத்திய குழு நாளை வருவதையொட்டி, ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்.
தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
தமிழகத்தின் முக்கியமான நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.
* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிச.5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தல்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 385 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,15,360 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,712 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 1,456 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,59,206 பேர் குணமடைந்துள்ளனர்.
* 7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்கி அரசாணை.
ரூ.16 கோடிக்கான நிதியை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
No comments:
Post a Comment