தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு
தமிழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வரும் 7 ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளநிலை வகுப்புகள் தொடங்கும்.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் டிசம்பர் 7ம் தேதி திறக்க அனுமதி.
மருத்துவ படிப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ம்தேதி தொடங்க அனுமதி.
மருத்துவக் கல்லூரிகள் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் டிச.1ம் தேதி முதல் தொடங்கும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் செயல்படலாம்.
சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி; கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்.
கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.
டிச.14 ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி.
புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு நடைமுறை தொடரும் - தமிழக அரசு.
No comments:
Post a Comment