இந்திய எல்லை லடாக் பகுதியில் உயிரிழந்த தமிழக இராணுவ வீரர் கோவில்பட்டி திட்டங்குளம் கருப்பசாமி குடும்பத்திற்கு பா.ம.கவினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்- நானும் அவரது பொற்றோர்கள், மனைவி தமயந்தி, குழந்தைகள் ஆகியோரிடம் கைபேசியில் ஆறுதல் கூறி அனுதாபத்தை தெரிவித்தோம். அவரது மனைவி தமயந்தி B.A., B.Ed படித்துள்ளதால் அருகில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைப் பணி அரசு உடனே வழங்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் கூடுதல் நிதி உதவியும் வழங்க வேண்டும்- பாமக தலைவர் ஜி.கே.மணி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழக இராணுவ வீரர் கருப்பசாமி லடாக் பகுதியில் வாகன விபத்து உயிரிழப்புக்கு பா.ம.க சார்பில் மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.துணை பொதுச்செயலாளர் இராமசந்திரன், மாவட்டத் தலைவர் மாடசாமி, மாவட்ட அமைப்புச் செயலாளர் காளிராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி, அனுதாபம் தெரிவித்தனர். நானும் கைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தந்தை இராஜேந்திரன், தாய் பிரசன்னா, மனைவி தமயந்தி மற்றும் குழந்தை ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறி அனுதாபம் தெரிவித்தேன்.
அவரது மனைவி தமயந்தி B.A., B.Ed படித்து பதிவு செய்துள்ளார். அவரது குடும்பத்தைக் காக்க அவரது மனைவிக்கு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுஆசிரியை பணி வழங்க வேண்டும். மத்தியி - மாநில அரசுகள் கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment