இந்தியாவைக் குறித்து - அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா - Agnipuratchi

இந்தியாவைக் குறித்து - அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா

Share This

இந்தியாவைக் குறித்து -  அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா

அரசியல் கட்சிகள் இடையே பகைமை, ஊழல், பிரிவினைவாதிகளின் ஆயுதம் ஏந்திய போராட்டம் போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும், நவீன இந்தியா உருவானது,    மிகப்   பெரிய    வெற்றி   என   அமெரிக்க  முன்னாள்  அதிபர்    பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின், 44வது அதிபராக இருந்த பராக் ஒபாமா, 'ஏ பிராமிஸ்ட் லேண்ட்' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். கடந்த 2008ல் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஆரம்பத்து, தன் பதவிக் காலம் முடிவு வரையிலான அனுபவங்களை, எழுதியுள்ளார்.  இரண்டு தொகுதிகளாக வெளியிட திட்டமிட்டு, முதல் தொகுதி, உலகெங்கும் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில், இந்தியா குறித்து அவர் எழுதியுள்ளதாவது: தொடர்ந்து ஆட்சி மாற்றம், அரசியல் கட்சிகள் இடையேயான பகைமை, பிரிவினைவாத அமைப்புகளின் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள், பெரும் ஊழல்கள் என பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்துள்ளது. இருப்பினும், நவீன இந்தியா உருவானது, மிகப் பெரிய வெற்றி.

நடுத்தர வர்க்கத்தினர்:

கடந்த, 1990களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால், நாட்டின் தொழில்துறையின் திறமைகள் வெளிப்பட்டன. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. தொழில்நுட்பத் துறை அதிக வளர்ச்சியை அடைந்தது. நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான்.

அவர் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதோடு, ஊழல் கறைபடாதவர் என, மக்களின் நம்பிக்கையை, மரியாதையை பெற்றார். கடந்த, 2010ல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டேன். வெளியுறவு கொள்கைகளில், மன்மோகன் சிங் எப்போதும் ஜாக்கிரதையாகவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்படுவார். அதனால்தான், அதிக அளவில் வெளிநாட்டு பயணங்களை அவர் மேற்கொள்ளவில்லை.

அவரை சந்தித்தபோது, மிகுந்த மதிநுட்பம் உள்ளவர், எளிமையானவர் என்ற என்னுடைய முதல் மதிப்பீடு சரியாக இருப்பதை உணர்ந்தேன். பல்வேறு துறைகளில் அப்போது ஒப்பந்தம் செய்தோம். நாட்டில் கோடிக்கணக்கான மக்கள், தெருவோரங்களிலும், கிராமங்களில் அல்லது குடிசைப் பகுதிகளில் அவதிப்படுகின்றனர். அதே நேரத்தில் பெரும் பணக்காரர்கள், அந்த காலத்து ராஜாக்களே பொறாமைபடும்படி சொகுசாக வசிக்கின்றனர்.

மக்கள் இடையே பிரபலமாக இருந்ததால், மன்மோகன் சிங் பிரதமராகவில்லை. அவர் எப்போதும், காங்ரஸ் தலைவர் சோனியாவுக்கு கடமைபட்டவராகவே செயல்பட்டுள்ளார். கட்சியில் எதிர்ப்பு இருந்ததால், பிரதமர் பதவியை சோனியா ஏற்கவில்லை. அந்த நேரத்தில் மன்மோகன் சிங்கை அவர் பிரதமராக்கினார். மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற தன் முயற்சிக்கு, மன்மோகன் சிங் தடையாக இருக்க மாட்டார் என, சோனியா நினைத்ததே, அதற்கு காரணம்.

ஒரு விருந்தில், சோனியா மற்றும் ராகுலை சந்தித்தேன். சோனியா அதிகம் பேசமாட்டார். மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பார். தன் மகன் ராகுலை முன்னிலைப்படுத்தியே அவர் செயல்பட்டு வந்தார். ராகுல், பார்ப்பதற்கு நன்றாக இருப்பார். எதிர்கால அரசியல் குறித்து பேசினார். கடந்த, 2008ல் நான் அதிபர் தேர்தலில் வென்றதை குறித்து அதிகம் கேள்வி கேட்டார். ராகுல் பதற்றத்துடன் இருப்பார். ஆசிரியரை திருப்திபடுத்தும் மாணவரைப் போல் செயல்படுகிறார். ஆனால், எதிலும் ஆழ்ந்த ஞானம் கிடையாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை என்று புத்தகத்தில் கூறியுள்ளார்.

ஒபாமா. முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த (முதல்) காலத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவரை அன்றைய அதிபர் ஒபாமா வரவேற்ற விதத்தை (உடல்மொழியை) அப்போதே வீடியோவில் கண்டு பிரம்மித்தேன். ஒரு நாட்டின் பிரதமரை ஒரு நாட்டின் அதிபர் வரவேற்பதற்கும், ஒரு மானசீக குருவை/ஆசிரியரை ஒரு மாணவர் வரவேற்பதற்குமான வித்தியாசம்//பணிவு அது.... 

அந்த மரியாதையினை ஒபாமா,  A Promised Land எனும் நூலில் திரு.சிங் பற்றி எழுதுகையில் குறிப்பிட்டிருக்கிறார், நாம் வாழ்ந்த அந்தக் கால இந்தியாவையே அவரும் அறிந்து வைத்திருந்து, அதிபரான பிறகு இந்தியா வந்தபோது, முற்றிலும் வேறொரு இந்தியாவைக் கண்டுகொண்டதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages