எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தமிழக அரசின் நடவடிக்கையால் ஏழை, எளிய மாணவர்கள் டாக்டர் ஆக உள்ளனர்.
நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1900 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.
தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது.
காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தன.
கொரோனாவிற்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் விமர்சித்தன.
விமர்சனங்களை தவிடுபொடியாக்கி தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம்.
என்னை பற்றி ஏதாவது நினைத்தால் தான் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கமே வரும்.
ஒரு நாள் கூட எனது அரசு தாங்காது என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
மூன்றரை வருடங்களை கடந்து எனது ஆட்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
கொரோனா காலகட்டத்திலும் கூட தமிழகத்தில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை, முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்பட்டன.
எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூமில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை வெளியிட மட்டுமே செய்கிறார் என்றார் - முதல்வர் பழனிச்சாமி.
No comments:
Post a Comment