நிவர் புயலை எதிர்கொள்ள மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் - தமிழக அரசு அறிவுறுத்தல்!
நிவர் புயல் காலத்தில் மக்கள் அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், 24ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெரும் மழையும், புயலும் வீச இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
நிவர் புயல் வீசும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடுமென இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குடிசை வீடுகள் பலத்த சேதமடையும், இரும்புத் தகடுகள் பறக்கலாம், மின் மற்றும் தொலை தொடர்பு வயர்கள் பாதிப்படையலாம் , பாதுகாப்பற்ற வீடுகள் சேதமடையும் என்று சாலைகள் சேதமடையும் என்று கூறப்பட்டுள்ளது. மரங்கள் முறியலாம், வேரோடு சாயலாம். வாழை, பப்பாளி, தோட்டக்கலை பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும். நீர் தேங்கங்களின் கரைகள், உப்பளங்கள் சேதமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment