அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2020) முக்கிய செய்திகள்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,71,619 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 483 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,12,504 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 17 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,622 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 1,904 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,47,752 பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து 84.59 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து 76.72 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி:
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வி.
தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி.
* நிவர் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருதாகவும் கடலுக்குச் சென்று உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது
* "புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்"- அமைச்சர் தங்கமணி
* வங்கக் கடலில் உருவான நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
புயல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...
கடலூர் மாவட்டத்தில் 24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு:
கடலூர் மாவட்ட மக்கள் 1077 என்ற தொலைபேசி எண்ணையும், 04142-220700, 233933, 221383, 221113 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள உத்தரவு.
* சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்திப்பு
* கட்டண பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வியில் சேர நடவடிக்கை தேவை -முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
கட்டண பிரச்னையால் தங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை சில மாணவர்கள் ஏற்க மறுத்த நிலையில் கடிதம்.
* நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
தற்போதைய நிலவரப்படி 25ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது- வானிலை மையம் வட மாவட்டங்களில் நாளை பலத்த காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்
* ஆளுநர் - முதல்வர் சந்திப்பு ரத்து
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் பழனிசாமியின் சந்திப்பு திடீர் ரத்து
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்க ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் ரத்து
நிவர் புயல் உருவாக உள்ள நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
* நிவர் புயல் எதிரொலி - எதிரொலி சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை
* தூத்துக்குடி போலீசார் மணல் மாஃபியாக்களுக்குதான் பாதுகாப்பா? - நீதிபதிகள்;
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகும், தூத்துக்குடி போலீசார் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என நீதிபதிகள் வேதனை.
நீதிமன்றம் உத்தரவிட்டும், புகார்மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? - மணல் கடத்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி.
* அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார் - அவருக்கு வயது 86:
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிப்பு.
கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் தருண் கோகாயின் உயிர் பிரிந்தது.
* நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்"
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
முதலமைச்சர் உத்தரவு
புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்துக்
* புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
* ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் 900 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதால் திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தயார் நிலையில் பேரிடர் மீட்பு
குழுக்கள் - தமிழகத்தில் 15 குழுக்கள் - ஆந்திராவில் - 15 மீட்பு குழுக்கள்
சென்னை-2,கடலூர் 6,அரக்கோணம் - 6,மதுரை - 1 - தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் இயக்குனர் சத்ய பிரதான்
* நிவர் புயல் எதிரொலி - எதிரொலி சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை
No comments:
Post a Comment