அக்னிப்புரட்சி இன்றைய ( 01.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர். 85.31 ரூபாயாகவும், டீசல் லிட்டர். 77.84 ரூபாயாகவும் உள்ளன.
*:புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் கிரண் பேடி.
* 20% வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம்- சென்னை வந்த பாமகவினர் எல்லையில் தடுத்து நிறுத்தம்.
சென்னை பெருங்களத்தூர் அருகே ஜிஎஸ்டி சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பாமகவினர் சாலை மறியல்.
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் பாமக, வன்னியர் சங்கம் போராட்டம் நடத்த கடலூரில் இருந்து புறப்பட்ட பாமகவினர் 250 க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.
* வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இலங்கை திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணிநேரத்தில் புரேவி புயலாக மாறும்.
புரேவி புயல் நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும்- இந்திய வானிலை மையம்.
* முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் சந்தோஷ் பாபு.
இதன் பின்னர் பேசி கமல்ஹாசன் எல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா
ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் - கமல்ஹாசன்.
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கமல்ஹாசன்.
* வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் - மதுரையில் மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவை அறிவிப்பேன் - மு.க.அழகிரி.
* அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி ஒரு பைசா கூட அதிகம் வசூலிக்கக் கூடாது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை.
* மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.
டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை. உடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு.
* கடலூர், பாம்பன், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்த நிலையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36,256க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,532க்கு விற்பனை.
* வங்கக்கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
* அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதோருக்கு அபராதம் வசூலிப்பதை எதிர்த்த வழக்கு.
சென்னை இராமாபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
* வாகனங்களுக்கு எஃப்.சி. வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் மெகா வசூலா?
போக்குவரத்துத்துறைக்குள் தனியார் நிறுவனங்கள் மூலம் மெகா வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது:
இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும்.
டிச.3-ம் தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும் - வானிலை மையம்.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
டிச.3ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
நாளை தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கும்.
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் கவலை அளிக்கிறது - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அமைதியான போராட்ட உரிமையை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் - ஜஸ்டின் ட்ரூடோ.
* டிசம்பர் 4 ம் தேதி வரை கனமழை, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்!” - முதல்வர் பழனிசாமி
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும் - முதலமைச்சர்.
கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதலமைச்சர் உத்தரவு.
புயல் வீச வாய்ப்புள்ளதால், டிச.4ம் தேதி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் - முதலமைச்சர் வேண்டுகோள்.
கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் - முதலமைச்சர்
* முதலமைச்சர் பழனிசாமியுடன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு.
சென்னையில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் சந்திப்பு.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த கோரிக்கை. முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கிச் சொன்னோம். அதனைக் கேட்டுக் கொண்ட அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் - முதலமைச்சரை சந்தித்து பேசியப் பிறகு . - அன்புமணி இராமதாஸ் பேட்டி.
* அரியர் தேர்வு முடிவுகளுக்கு தடை:
பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை.
அரியர் ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்.
வழக்கு விசாரணையை யூ- டியூபில் வெளியிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
அரியர் தேர்வு வழக்கு விசாரணை இனி நேரடியாக மட்டுமே நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்.
* 7.5% இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக இருக்கும் இடங்களில், தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை-உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்.
* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி புள்ளிவிவரங்கள் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது - முதலமைச்சர்.
69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள சாதி வாரியான புள்ளிவிபரம் தேவை - முதலமைச்சர்.
* தலைவர்களின் சிலைகள் மரியாதை நிமித்தமாக நிறுவப்படுகின்றன. ஆனால், சமீபகாலமாக அவை கூண்டுக்குள் வைக்கப்பட்டு அவமதிப்பது போலவும், ஏதோ சிறை தண்டனை வழங்கப்பட்டது போலவும் வைக்கப்பட்டுள்ளன- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து.
நிவர் புயல் சேத பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வருகையில் மாற்றம். டிசம்பர் 5-ஆம் தேதி தமிழகம் வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்.
* தமிழகத்தில் இன்று புதிதாக 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,83,319 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 380 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,15,739 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 10 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,722 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 1,411 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,60,617 பேர் குணமடைந்துள்ளனர்.
* எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது -வானிலை ஆய்வு மையம்.
No comments:
Post a Comment