அக்னிப்புரட்சி இன்றைய (05.12.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.12.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.12.2020) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து 86.00 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து 78.69 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 4-வது ஆண்டு நினைவுநாள்......

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  4 ஆம் ஆண்டு நினைவு தினம் - முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி:

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மரியாதை.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

முன்னணி திரைப்பட நடிகை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதலமைச்சர் என ஒவ்வொன்றிலும் கோலோச்சியவர்.

இரும்பு பெண்மணியாக கட்சித் தொண்டர்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஜெயலலிதா.

* தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று மதியம் சென்னை வருகை.

டிச.8 வரை தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

* விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்.

ஓமலூர், அயோத்தியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் திமுகவினர் சாலை மறியல்.

* அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன்.

ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? - கமல்ஹாசன்.

*:தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் துவங்கும் நபர்களின் நிலத்திற்கான மொத்த விலையில் 50 % தமிழக அரசு ஏற்கும் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

* புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை மாவட்டம் - அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன் நியமனம்.

கடலூர் மாவட்டம் - அமைச்சர்கள் தங்கமணி,
எம்.சி.சம்பத்.

திருவாரூர் - அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,
காமராஜ்.

நாகை - எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - செங்கோட்டையன், பெஞ்சமின்.

* கட்சி தொடங்கிய பிறகுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்:

ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் எதுவும் பேசவில்லை.
அடிப்படை செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம் -தமிழருவி மணியன்.

டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி குறித்து அறிவிப்பார்.
ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும்.

ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கம் இணையும். நடிகர் ரஜினிகாந்துடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழருவி மணியன் பேட்டி.

* பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு:

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்.

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டும், வருகிற 14ஆம் தேதி தொடங்கும்.

இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்.

விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம்.

*கடலூர் மாவட்டத்தில் பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று கொட்டிய பெருமழையால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.

150-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 குழுக்களாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தால் நேற்று ஒரே நாளில் 778 வீடுகள் சேதமடைந்துள்ளது.  50 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

*பொம்மையார் பாளையம் மீனவர்கள் ஈசிஆர் சாலையில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி அருகே பொம்மையார் பாளையம் மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் மறியல் செய்வதால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

*சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மீனம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

*ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உட்பட 2 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

*செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூட முயற்சி - மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தமிழ் ஆராய்ச்சிக்காக தொடங்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்படும் 
பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிப்பதாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தனி மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். 

*புயல் பாதிப்பு-விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,.

அப்போது பேசிய கேபி அன்பழகன், இந்தியாவிலேயே குடிமராமத்து மற்றும் நீர் மேலாண்மை  திட்டப்பணிகள்  தமிழகத்தில் மட்டுமே சிறந்த முறையில் செயல்படுவதாக  பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் என்று தெரிவித்தார்,.

மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

*ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியீடு

இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  

விளம்பரங்களை ஒளிபரப்பும் போது, நிதி சார்ந்த அபாயம் இருக்கிறது என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், எந்த மொழியில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள் வெளியிடப்படுகிறதோ, அதே மொழியில் எச்சரிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை வருமானத்துக்கான வழி, வேலை வாய்ப்புக்கான மாற்று என விளம்பரம் செய்யக்கூடாது,

ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களை வெற்றியாளர்போல சித்தரிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், விளம்பரதாரர்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை :

திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி
நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம்

மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை

*காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது: வானிலை மையம் தகவல் !

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். மேலும், 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், தமிழகத்தில் கனமழை தொடரும். இதனையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

*அரியலூர் மாவட்டம் இலங்கைசேரி கிராமத்தில் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு !

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலங்கைசேரி கிராமத்தில் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி முத்துலட்சுமி உயிரிழந்துள்ளார்.

*புயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை !

சென்னை: புயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

*அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்துகிறார் ரஜினி !

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்துகிறார். இதுவரை 47,520 பூத் கமிட்டிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*எடப்பாடியில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தம்

சேலம்: எடப்பாடி, கொங்கணாபுரத்தில் இருந்து சேலம் சென்ற திமுகவினர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி மண்டபத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

*டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ. 37,216-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 37,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ரூ. 4,652-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

*சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சதுக்கம், மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

*விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.

*மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டம்

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தாம்பரத்தில் திமுகவினர் 2,000 பேர் கருப்பு உடை அணிந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

*முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை கீரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages