அக்னிப்புரட்சி இன்றைய (07.12.2020) முக்கிய செய்திகள்
* சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டம் - உச்சநீதிமன்றம் அதிருப்தி:
உச்சநீதிமன்றத்திற்கு உரிய மதிப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும் - நீதிபதிகள் கருத்து.
புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவை தவிர்த்து, எவ்வித கட்டுமானமோ, இடிப்பதோ
நடைபெறாது- சொலிசிட்டர் ஜெனரல்.
மரங்களும் வெட்டப்படாது என உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதி.
புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் அனுமதி.
வருகிற 10ம் தேதி புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
* ஜெயலலிதா பற்றி பேசுவதற்கு திமுகவின் ஆ.ராசாவுக்கு யோக்கியதை கிடையாது
ஆ.ராசா இனியாவது நாவை அடக்கி பேசவேண்டும் ; இல்லையெனில், நாலந்தரமாய் இல்லை, நாற்பதாம்தரமாய் பதிலடி கொடுக்க அதிமுகவில் ஆள் இருக்கிறது -நமது அம்மா நாளேடு கடும் விமர்சனம்
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்:
கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் முதலமைச்சர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார்.
கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.
* சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம்:
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.
ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
* ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு.
டிச.21 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து நவ. 21 ஆம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
* அறிக்கை நாயகன் என்று முதலமைச்சர் கொடுத்த பட்டத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன் - ஊழல் நாயகன், கமிசன் நாயகன், கரெப்சன் நாயகன் எனும் பட்டத்தை முதலமைச்சருக்கு வழங்குகிறேன் -மு.க.ஸ்டாலின்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும்.
மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்தித்து நிவாரணம் வழங்கியது திமுக.
நீர் நிலைகளில் குடிமராமத்து பணிகள் என்று கூறி கமிசன் அடிப்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
அறிக்கை நாயகன் என்று முதலமைச்சர் கொடுத்த பட்டத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
ஊழல் நாயகன், கமிசன் நாயகன், கரெப்சன் நாயகன் எனும் பட்டத்தை முதலமைச்சருக்கு வழங்குகிறேன்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ரஜினி கட்சியை தொடங்கிய பிறகு பார்க்கலாம்.
தமிழருவி மணியனை தவறாக சேர்த்துக் கொண்டோமோ என்று ரஜினி யோசிப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
ரஜினி கட்சி ஆரம்பித்து கொள்கைகளை அறிவித்த பிறகு பேசலாம்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பஃபூன் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
* காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது; சில நிகழ்வுகள் காவல்துறைக்கு எதிராக இருக்கலாம்: ஐகோர்ட் நீதிபதிகள்.
காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது.
சில நிகழ்வுகள் காவல்துறைக்கு எதிராக இருக்கலாம் ஆனால் காவல்துறையினர் நமக்கு தேவை.
பிறமாநிலங்களில் காவல்துறைனரின் ஊதியம், தமிழக போலீஸ் ஊதியம் குறித்த தகவலை அளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
* வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும்; தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
கல்லூரியின் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும்.
கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம்- அரசாணை.
என் ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது -கமல்ஹாசன் ட்வீட்.
* ராணிப்பேட்டையில் விபத்தில் இறந்த காவலர் அய்யனமூர்த்தி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி.
காவலர் அய்யனமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவு- முதல்வர் பழனிசாமி.
* தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தமிழகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் கொண்டுவர கோரிய வழக்கில், தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
வாக்காளர்கள் பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குகின்றனர், பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை.
வருமான வரித்துறைக்கு தெரிந்தே, அரசியல் கட்சிக்கு இடையே கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது - நீதிபதிகள்.
தொகுதிக்கு ரூ.50 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றனர் - நீதிபதிகள்.
* கலையரசன் குழு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன்.
ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவு. நாளை நேரில் ஆஜராவதாக, விசாரணைக் குழுவிற்கு பதிவாளர் தகவல்.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விசாரணை தொடர்பான ஆவணங்களை அளிக்காததால் அதிரடி.
* மழைநீர் வடிகாலில் விழுந்து தாய், மகள் பலி..!
சென்னை நொளம்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த தாயும், மகளும் நிலைத்தடுமாறி, சாலையோரம் மூடப்படாமல் கிடந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயனம்பாக்கத்தை சேர்ந்த கரோலின் பிரமிளா தனது மகள் இவாலினுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து நொளம்பூர் நோக்கி மதுரவாயல் புறவழிச்சாலையை ஒட்டிய இணைப்புச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பகுதியில் தெருவிளக்கின்றி இருள் சூழ்ந்து கிடந்ததால், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும்பொருட்டு, சாலையோரமாக ஒதுங்கியுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக சேற்றில் இருசக்கர வாகனம் வழுக்கி, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்துள்ளனர்.
இரவு நேரம் என்பதாலும், வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத பகுதி என்பதாலும், அவர்கள் தவறி விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வடிகால் வாய்க்கால் மீது இருசக்கர வாகனம் மட்டும் கிடப்பதை கண்டு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, உள்ளே விழுந்த தாயும், மகளும் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளனர்.
* தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் புயல்-மழையால் பாதிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்.
வேளாண்மைத்துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.
புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை முதலமைச்சர் மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவார் -அமைச்சர் அன்பழகன்.
மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
* தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 100% பயணிகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி!
பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி.
தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி.
கொரோனா தொற்று காரணமாக 60% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100% இருக்கைகளுக்கு அனுமதி.
No comments:
Post a Comment