கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் தொடர் மழையால் 300க்கு மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ள மழை நீரால் ஒரு இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு நிரந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி
கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் தொடர் மழையால் 300க்கு மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ள மழை நீரால் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மேலும், 4 பேர் உயிர்ச் சேதமும் நிறைய குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் இடிந்தும் கால்நடைகள் சேதம் என கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.5 இலட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் சேதம். போர்க்கால மீட்பு நடவடிக்கையும் நிவாரண உதவியும் தேவை. அடிக்கடி பாதிக்கப்படுவதால் நிரந்தர தீர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை வேண்டும்.
சமீபத்திய நிவர் புயல், புரெவி புயல் ஆகிய இரண்டு புயல்களாலும் அதைத் தொடர்ந்து பெய்த கன மழையினாலும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பண்ருட்டி,நெய்வேலி ஆகியவற்றை சுற்றிலுமுள்ள 300க்கு மேற்பட்ட கிராமங்களும் அவற்றில் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.4 பேர் உயிர்ச் சேதமும் நிறைய குடிசை வீடுகள் - ஓட்டு வீடுகள் இடிந்தும் கால்நடைகள் சேதமும் என கடும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் இன்னும் வடிந்தபாடில்லை. அரசின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ம.கவினரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவும், உதவிகளும் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்ட பொதுமக்கள் ஓரளவிற்காவது நிம்மதி பெருமூச்சுவிட போர்க்கால மீட்பு நடவடிக்கைகளும் நிவாரண உதவிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அடிக்கடி புயலாலும் கடும் மழையினாலும் பாதிப்புக்குள்ளாகும் கடலூர் மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு மற்றும் நிரந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.
No comments:
Post a Comment