அக்னிப்புரட்சி இன்றைய (09.12.2020) முக்கிய செய்திகள்
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி நிதி-தமிழக அரசு ஒதுக்கீடு.
புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், மின்கம்பங்களை சீரமைக்க நிதி. சேதடைந்த பாலங்கள், சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* நாகூர் தர்காவில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி:
நாகூர் தர்காவில் குளம் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகூர் தர்காவில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார்.
* செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை:
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
* நாகை: கருங்கண்ணியில் புயல், மழையால் ஏற்பட்ட பயிர்சேத பாதிப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்.
கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
* வேலூர்: அணைக்கட்டு புலிமேடு, அரியூரில் சிறை வார்டன் உள்பட 3 பேர் அடுத்ததடுத்து கொலை:
அரியூரை சேர்ந்த கமலேஷ், புழல் சிறை வார்டன் தணிகைவேல், திவாகர் அடுத்ததடுத்து வெட்டிக்கொலை.
முன்விரோதத்தில் நண்பர்களான 3 பேரையும் கொலை செய்த ரவுடி ராஜா, ஜாம்பர் ராஜா உள்பட 5 பேர் சிக்கினர்.
அசோக்கை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்த நிலையில் அவரது நண்பர்களையும் ரவுடி ராஜா கொன்றதாக தகவல்.
* சென்னை கோடம்பாக்கத்தில் நடந்து செல்லும்போது பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து நரசிம்மன் என்பவர் உயிரிழப்பு.
நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு சம்பவம்.
* கொரோனா நோயாளிகள் வீட்டில் குறிப்பிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை"
வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தீர்ப்பு.
* சென்னையில் இன்று காலை முதியவர் உயிரிழந்த விவகாரம்- மாநகராட்சி மறுப்பு:
மழைநீர் தேங்கிய பள்ளத்திலோ, கழிவுநீர் கால்வாயிலோ விழுந்து உயிரிழக்கவில்லை.
மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
* மாசுக்கட்டுப்பாடு வாரியமே ஊழலால் மாசுப்பட்டு காணப்படுகிறது.
டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர்.
இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு நோய்கள் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* சென்னை வடபழனியில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் அவ்வழியே குடிபோதையில் சென்ற காவலர், அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி வருமாறு தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதால் பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
* ஜம்மு - காஷ்மீர் : புல்வாமா அருகே பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
பயங்கரவாதிகள் - பாதுகாப்புப் படையினர் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்களில் ஒருவர் காயம்.
* ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா:
நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி.
சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி.
* வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது - மத்திய அரசு திட்டவட்டம்
வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.
இது தொடர்பான வரைவு அறிக்கையை விவசாய சங்கங்களுக்கு அனுப்பியது மத்திய அரசு.
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - விவசாய சங்கங்கள்.
* உரிய முகாந்திரம் இன்றி அவதூறு வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும்" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்தது -சென்னை உயர் நீதிமன்றம்.
No comments:
Post a Comment