தருமபுரி அருகே 11 வாகனங்கள் மோதி கோர விபத்து - 4 பேர் பலி. - Agnipuratchi

தருமபுரி அருகே 11 வாகனங்கள் மோதி கோர விபத்து - 4 பேர் பலி.

Share This

தருமபுரி அருகே 11 வாகனங்கள் மோதி கோர விபத்து - 4 பேர் பலி.

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலை கணவாய் பாலத்தில் சிமெண்ட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி முன்னால் சென்ற 11க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய கோர விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

மிகவும் தாழ்வாக அமைந்துள்ள தொப்புர் கணவாய் பாலத்தைக் கடக்கும்போது சிமெண்ட் பாரம் தாங்காமல் லாரியின் பிரேக் பழுதானதாகக் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகனம் மீது மோதி இழுத்துச் சென்றுள்ளது, அதே நேரம் சாலையின் வலது ஓரமாக சென்று கொண்டிருந்த 11 கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை லாரியின் கண்டெய்னர் பகுதி, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் நசுக்கியவாறு சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

இதில் கார்கள் உருக்குலைந்து போயின. விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages