மிக மிக முக்கிய அறிவிப்பும் வேண்டுகோளும் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) "பொதுமக்கள் மனு கொடுக்கும்போது செய்யவேண்டியது - ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு குழு - Agnipuratchi

மிக மிக முக்கிய அறிவிப்பும் வேண்டுகோளும் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) "பொதுமக்கள் மனு கொடுக்கும்போது செய்யவேண்டியது - ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு குழு

Share This

மிக மிக முக்கிய அறிவிப்பும் வேண்டுகோளும்  கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) "பொதுமக்கள் மனு கொடுக்கும்போது செய்யவேண்டியது  - ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு குழு

அன்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் செயல்வீரர்களுக்கும்,

வருகின்ற 14.12.2020 திங்கட்கிழமை கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) "பொதுமக்கள் மனு கொடுக்கும் மக்கள் திரள் அறவழிப் போராட்ட நிகழ்வு "க்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து வருகின்ற ஒவ்வொருவருக்கும், உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்பாடு செய்து வருகின்ற தகவல் வந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.          

அன்பான வேண்டுகோள்,  

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலருக்கும் (VAO)மனு கொடுக்க வேண்டும். ஒரு VAO வுக்குகூட  கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது. மனு கொடுக்கும் முன்பே மனுவை நகல் (XEROX) எடுத்துச் சென்று உண்மை மனு (ORIGINAL) VAO விடம் கொடுத்துவிட்டு ,அதன் நகலில் பெற்றுக்கொண்டேன் என VAO விடம் கையெழுத்து வாங்கி, சீல் (SEAL) வைத்து வாங்கிவர வேண்டும். மிக மிக முக்கியம்.        

வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள்  ஆகிய ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள VAO அலுவலகங்கள் பட்டியல் வைத்துக்கொண்டு, ஒரு நபருக்கு ஒருVAO, சிலருக்கு இரண்டு VAO, சிலருக்கு ஐந்து VAO, ஒரு சிலருக்கு பத்து VAO என பிரித்துக் கொடுத்து, இதற்கு நீங்கள் தான் பொறுப்பு என ஒப்படைத்து இதை நிறைவேற்ற வேண்டும். எந்த ஒரு மாவட்டத்திலும் ஒரு VAO அலுவலகம் போகவில்லை என்ற நிலை வரக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் 12,622 VAO விடம் மனு சென்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு செய்தி வர வேண்டும். சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களிடமும் பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி MP அவர்களிடமும் எல்லா மாவட்டமும் பாராட்டு பெற வேண்டும். நமது இயக்க வரலாற்றில் இது மிக மிக முக்கியமான நிகழ்வு. மிகக் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு VAO அலுவலகமும் செல்லவில்லை என நிலை வாக்கூடாது. மனு இத்துடன் மீண்டும் அனுப்பியுள்ளோம்.நமது இயக்கத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் தம் கடமையாகக் கருதி நிறைவேற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages