முக்கியச் செய்தி:- தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் நாளை காலை 11.00 மணிக்கு VAOக்கள் தவறாமல் அலுவலகம் சென்று மனு வாங்க வேண்டும். காலிப் பணியிடம் உள்ள இடத்திற்கு பொறுப்பு VOAக்கள் செல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பிவைக்கபட உள்ளது என அரசு தரப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள VAO க்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது- ஜி.கே.மணி தலைவர் பாமக & வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு
அன்புள்ள பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், சகோதரர்கள்,சகோதரிகள்,பாட்டாளிச் சொந்தங்கள் அனைவருக்கும்,
நாளை திங்கட்கிழமை 11.00 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் 12,622 கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) " பொதுமக்கள் மனு கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறவழிப் போராட்ட நிகழ்வு ". மிக வேகமாக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது சமூகநீதி வரலாற்றில் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் இலட்சியப் பாதை. பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி MP அவர்களின் இலட்சியம். நம் இயக்கத்தினர் அனைவரின் அர்ப்பணிப்பு உழைப்பு. இவை வரலாற்று நிகழ்வு,
தமிழ்நாடு முழுவதும் ஒரு VAO அலுவலகம் கூட பாக்கி இல்லாமல் எல்லா இடங்களிலும் நமது பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், சகோதரர்கள், சகோதரிகள், தம்பிகள், தங்கைகள் அனைவரும் இதை நிறைவேற்ற வேண்டும். இது நமது இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரின் சமூகநீதிக் கடமை, அடிப்படைஉரிமை பெறுவது என்ற செயல்படும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்: உங்கள் அன்பு மறவாத ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்.
No comments:
Post a Comment