அக்னிப்புரட்சி இன்றைய (14.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
* முட்டை கொள்முதல் விலை 40 காசு உயர்ந்து ரூ.4.80 ஆனது.
நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆக நிர்ணயம்.
* கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தில் ஆசாரி வேலை செய்து வந்த மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் கந்து வட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை.
* தமிழகத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் விரைவில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.
முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
* பணியாற்ற விடாமல் தடுப்பதாக பழங்குடியின பெண் ஊராட்சி தலைவர் புகார்:
துணைத் தலைவர் கிருஷ்ணன் இடையூறு செய்வதாக ஊராட்சி தலைவர் சுந்தரி குற்றச்சாட்டு.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் பரபரப்பு.
ஜாதியை குறிப்பிட்டு இழிவாக பேசுவதாக துணைத் தலைவர் மீது சுந்தரி குற்றச்சாட்டு.
துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
" விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் துணிகர கொள்ளை.
ரூ.6 லட்சம் ரொக்கப் பணத்தை லாக்கரோடு கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள்.
கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் செஞ்சி போலீசார் விசாரணை.
* குற்றாலம் அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி - தென்காசி ஆட்சியர் சமீரன் அறிவிப்பு.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி.
* வரும் 18-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம்.
வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
* தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்.
டிச.16-18 வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்.
* முதலமைச்சர் முன்னிலையில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம்:
சிப்காட் நிறுவனத்தின் GIS இணையதளத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ரூ.19,955 கோடியில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் சென்னையில் கையெழுத்திடப்பட்டது.
* தமிழக முதலமைச்சர் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
அரசியல் தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கிய அரசியலுக்கு அழகல்ல - உயர் நீதிமன்றம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான வார்த்தைகளை பேசுவது தாக்கத்தை உருவாக்கும் - உயர் நீதிமன்றம்.
* மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி:
“பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருகிறார்கள்"
மதுவை கூடுதல் விலைக்கு விற்பது, அவர்களிடமே கொள்ளையடிப்பது போல உள்ளது - நீதிபதிகள் கருத்து.
மதுபான கடைகளில் நீதிபதிகளே நேரடியாக ஆய்வு நடத்த நேரிடும் - நீதிபதிகள் எச்சரிக்கை.
* ஒரு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த நிலையில், தற்போது அந்த தேர்வுகளுக்கு தமிழர்கள் பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்தம்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கு, தமிழகத்தை சேர்ந்தோர் விண்ணப்பிப்பது இல்லை என்றனர்.
பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவுக்கும், மதுவுக்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கிவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் அரசின் வேலை வாய்ப்புகள், அதற்கான பயிற்சிகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனக் கூறினர்.
அரசு மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி மையங்களை அமைக்கலாம் எனக் கூறி,தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
" இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும் - ஜவடேகர்.
* செல்போன்களில் யூ டியூப், ஜி-மெயில் செயலி முடங்கியது:
வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை
செல்போன்கள் மூலம் யூ டியூப், ஜி-மெயில் பயன்படுத்துவோர் அவதி.
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது யூடியூப் மற்றும் ஜி மெயில்.
* எல்லை தாண்டி வந்ததாக 15க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு:
மீனவர்களை பிடித்து காங்கேசன் முகாமுக்கு அழைத்துச் சென்றனர், இலங்கை கடற்படையினர்.
3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர், இலங்கை கடற்படையினர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.
* அமமுகவிற்கு குக்கர் சின்னம்!
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்!
தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு!
புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு!
* சென்னை அருகே பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் கார்த்திக் என்பவரின் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதுபேருந்து மோதியதில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
கார்த்திக் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்துக்கு தீ வைத்தனர். பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசம் - போலீசார் விசாரணை.
* அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி: டிரம்ப்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது - அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தகவல்.
* விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நகை, பணம் பறிமுதல் எதிரொலி:
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து ஆணையர் நடவடிக்கை.
No comments:
Post a Comment