அக்னிப்புரட்சி இன்றைய 16.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவ 2-ம் நாள்:
நம்பெருமாள் முத்து சாய்வு கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்கக்கிளி, பவளமாலை, பஞ்சாயுத பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது
- சென்னை ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
* டிச.19ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு வரும் 19 முதல் அனுமதி சமுதாயம், விளையாட்டு,மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் அனுமதி!
திறந்தவெளியில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் ஆட்களை அனுமதிக்கலாம்
மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்!
சென்னை மாநகராட்சியில் காவல் ஆணையரின் அனுமதியை பெற வேண்டும்!
கல்வி-கலாச்சார-பொழுதுபோக்கு கூட்டங்களுக்கும் அனுமதி அறிக்கை வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்.
* வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30, 2021-க்குள் காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தவும் தடை - உயர்நீதிமன்றம்.
* 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய தினம் இன்று!
நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தி மரியாதை
" கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை - பாஜகவுக்கு பின்னடைவு
கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4ல் இடதுசாரிகளும், 2ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன
86 நகராட்சிகளில் 39ல் இடதுசாரிகள், 38ல் காங்கிரஸ் கூட்டணியும், 2ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன
* அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று விவகாரம் அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை
வகுப்புகளை தள்ளி வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அண்ணா பல்கலை.மாணவர்களுக்கும் பரிசோதனை
* ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.68.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் திறக்கப்படும்...
விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்
* திரைப்பட பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் இன்று காலை முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு அவருக்கு இருதய நோய் பிரிவு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் மதிவாணன்.
41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தேமுதிக சொல்வதிலிருந்து கட்சி நிலை தெரிகிறது.
தேமுதிகவில் நடக்கும் எதுவும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு தெரியாது.
திமுகவில் இணைந்த வடசென்னை தேமுதிக முன்னாள் மாவட்ட செயலாளர் மதிவாணன் பேட்டி.
* கரூர் மாவட்டத்தில் ரூ.627 கோடியிலான 2,089 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்.
ரூ.118.53 கோடியில் முடிவுற்ற 28 திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
* ஐ.ஐ.டி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி விட்டு ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
"இடஒதுக்கீடு பிரிவில் வருவோர் அனைவருமே தகுதி இல்லாதவர்கள்” என்று கங்கணம் கட்டிக் கொண்டு முத்திரை குத்துவதும்; அந்த மனப்பான்மையில் மத்திய அரசு செயல்படுவதும் நாட்டின் 80 சதவீத மக்களை அவமதிப்பதாகும் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை.
* பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல்.
பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
* சிஎம்எஸ்-1 செயற்கைக் கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்:
கடந்த 2011-ம் ஆண்டு இஸ்ரோ செலுத்திய ஜிசாட்-12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் தற்போது முடிந்துவிட்டது.
அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் சுமார் 1,400 கிலோ எடை கொண்டது.
இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் அலைக்கற்றைகள் தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க உதவும்.
தொலை மருத்துவம், இணையவழிக் கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவையை எளிதாக்கும்.
* திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம்:
சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று செயற்கைக்கோள் மாதிரி வடிவமைப்பை ஏழுமலையான் பாதத்தில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
* சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன்.37,504-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வரும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் -மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் நெல்லையில் இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து கமல் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்றும் ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதலமைச்சர் என்பதை பேசி முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் குற்றம் சாடியுள்ளனர்.
* 2021ம் ஆண்டு, மார்ச் மாதம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஏலம் விட முடிவு- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
4 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விட ஒப்புதல்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் மொத்த மதிப்பு ரூ.3,92,332.70 கோடி.
* சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், சஞ்ஜீப் பானர்ஜி.
புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு.
தற்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
சஞ்ஜீப் பானர்ஜி, தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.
* கடந்த 75 நாட்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது:
தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்.
லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் கைது-லஞ்ச ஒழிப்புத்துறை.
புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சமும், திடீர் சோதனைகளில் ரூ.6.96 கோடியும் பறிமுதல்.
7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை.
* விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் நடப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிஷ்டவசமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுவதாக தெரியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
* ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோய் தாக்கியதற்கு விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே காரணம்-எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.
பொதுமக்கள் உடலில் ஈயம், நிக்கல் எவ்வாறு கலந்தது ?- பரிசோதனை தீவிரம் எனத் தகவல்.
* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என ஆர்.டி.ஐ. மூலம் வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது - ஸ்டாலின்.
அரசின் அலட்சியத்தால் 5 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருக்கிறது - ஸ்டாலின்.
* நீட் தேர்வைப் போலவே, ஜேஇஇ மெயின் தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் என்றும், கணினிவழித் தேர்வாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிஆர்க், படிப்பில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு மட்டும் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
* 2021 ம் ஆண்டு டிஎன்பிசிஎஸ்சி குரூப் தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியீடு.
டிஎன்பிசிஎஸ்சி குரூப்-1 தேர்வுகள் ஜனவரி 3-ல் நடைபெறும்.
குரூப் 2 தேர்வுகள் மே மாதமும் ஜூலையில் குரூப்- 3 தேர்வுகளும் நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் செப்டம்பரில் நடைபெறும்.
* புதுச்சேரி டிஜிபி மாற்றம்:
புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவட்சா டெல்லிக்கு மாற்றம்.
டெல்லியில் பணியாற்றி வந்த ரன்வீர் சிங் ஐபிஎஸ் புதுச்சேரி டிஜிபியாக நியமனம்-மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
No comments:
Post a Comment