வன்னியர் 20/- தனி இட ஒதுக்கீடு கேட்டு 23.12.2020 நாளை நடைபெறும் அறப்போராட்டம் உங்களால் வெற்றிபெற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
பேரன்புமிக்க பாட்டளிச் சொந்தங்களுக்கு, வணக்கம்.
23.12.2020 நாளை நடைபெறும் அறப்போராட்டம் உங்களால் வெற்றிபெற வேண்டும்.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிய தொடர் போராட்டத்தினையொட்டி நாளை 23.12.2020 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 528 பேரூராட்சி செயல்அலுவலரிடமும்(E.O), சென்னை உள்ளிட்ட15 மாநகராட்சிகளின் 72 மண்டல அலுவலரிடம் (உதவி ஆணையர்)" மனு கொடுக்கும் மக்கள் திரள் அறப் போராட்ட நிகழ்வு" உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பால் வெற்றி பெறும். இதில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க உள்ள செய்தி வரவேற்பளிக்கிறது. உரிமைப் போராட்டம்... வெற்றி கிட்டும்...
No comments:
Post a Comment